மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

கூவம் சீரமைப்பும் அறிவியல், சமூகப் பார்வையும்!

  கூவம் சீரமைப்பும் அறிவியல், சமூகப் பார்வையும்!

விளம்பரம்

கூவம் சீரமைப்பு தொடர்பாக மனித நேயர் மேயராக இருந்தபோது... மாநகராட்சி சார்பாகவும், தமிழக அரசின் மற்ற நிர்வாக அமைப்புகளோடு இணைந்தும் மேற்கொண்ட நடவடிக்கைகளை புள்ளி விவரக் கண்ணாடி அணிந்துகொண்டு பார்த்து வருகிறோம்.

அதன் தொடர்ச்சியை இப்போது காண்போம்...

சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் 15 ஒப்பப் பணிகள் ரூ.186.19 கோடியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை குடிநீர் எல்லைக்குள் சேத்துப்பட்டு மன்றோ பாலம் வரை பாதாள கழிவு நீர் குழாய்கள் அமைக்கும் பணி, கழிவுநீர் சுத்திகரிப்பு பணி ஆகியவை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் சேத்துப்பட்டு மன்றோ பாலம் நேப்பியர் பாலம் வரை கடலோர ஒழுங்கு முறை மண்டலத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் கூவம் நதி கரையோரம் இரண்டு பக்கமும் இருக்கும் சுமார் 14, 257 குடிசைப் பகுதி குடும்பங்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் மற்றும் திருமழிசை கூம்பாக்கம் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. இதன் பணித் தொகை ரூ.1223.60 கோடியாகும்.

இதில் 202 குடிசைப் பகுதி குடும்பங்கள் பெரும்பாக்கம் திட்டப் பகுதியிலும், 195 குடிசைப் பகுதி குடும்பங்கள் திருமழிசை கூம்பாக்கம் திட்டப் பகுதியிலும் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மீதமுள்ள குடும்பங்களை மறு குடியமர்வு செய்யவும் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பொதுப் பணித் துறையுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை நதிகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை - 3 ஒப்பப் பணிகள் மொத்த தொகை ரூ.7.06 கோடியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுப் பணித் துறையில் 9 பணிகள் ரூ.81.01 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பெருநகர சென்னை மாநகராட்சி 12 பணிகளை ரூ.87.41 கோடியிலும், நகராட்சி நிர்வாகத் துறை 5 பணிகளை ரூ.27.24 கோடியிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை 7 பணிகளை ரூ. 3.18 கோடி ரூபாயிலும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர்அகற்றுவாரியம் 15 பணிகளை ரூ.161.18 கோடியிலும் செய்து வருகிறன.

இதுமட்டுமல்ல... தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் 9 பணிகள் ரூ.1087.63 கோடி மதிப்பீட்டிலும், சென்னை நதிகள் மறு சீரமைப்புஅறக்கட்டளை 3 பணிகளை ரூ.6.11 கோடி மதிப்பீட்டிலும் செய்து வருகின்றன.

பொதுப் பணித் துறை

பொதுப் பணித் துறை கூவம் நதியின் முகத்துவாரத்தில் நதியை ஆழப்படுத்தும் பணி , கூவம் நதியில் உள்ள சில்ட் மண் அகற்றும் பணி ; அகற்றப்பட்ட மண் குறிப்பிட்ட இடத்தில் கொட்டும் பணி, நதியை அகலப்படுத்துதல் மற்றும் ஆழப்படுத்துதல், நதியின் மையப்பகுதியில் சிறிய துளை கால்வாய் அமைக்கும் பணி, நதியின் இரு கரையோரங்களிலும் பண்ட் அமைக்கும் பணி நதியின் இரு கரைகளையும் நிர்ணயம் செய்து, கரையின் ஓரம் பவுண்டரி கல் (எல்லைக் கல்) அமைக்கும் பணி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்படாத பகுதிகளில், குடிசைப் பகுதி மக்களின் கணக்கெடுப்பு மற்றும் பயோமெட்ரிக் மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை செய்கிறது.,

பெருநகர சென்னை மாநகராட்சி

கூவம் நதியின் இரு பக்கமும் கட்டிடக் கழிவுகள் மற்றும் திடக் கழிவுகள் அகற்றும் பணி, கூவம் நதியின் இரு கரைகளின் எல்லையிலும் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி, கூவம் நதியில் குறிப்பிட்ட இடங்களில் பூம் சிஸ்டம் நதியில் வரும் ஆகாய தாமரை மற்றம் இதர மிதக்கும் குப்பைகளைச் சேகரித்து அவ்விடத்திலேயே அகற்றும் பணி

கூவம் நதியின் கரையோரம், பூங்கா அமைக்கும் பணி, நடைபாதை அமைக்கும் பணி, மிதி வண்டி தடம்அமைக்கும் பணி, பூங்காக்களில் செடிகள் அமைக்கும் பணி (மொத்தம் 24 பணிகள்)

பெருநகர சென்னை மாநகராட்சி, தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்துடனும், பொதுப்பணித் துறையுடனும் இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கூவம் நதியின் இருபுறமும்ஆக்கிரமிப்பு செய்துள்ள குடிசைப் பகுதி மக்களின் கணக்கெடுப்பு பணி, விரல் ரேகை மற்றும் குடும்ப புகைப்படம் எடுக்கும் பணி, மேலும் குடிசைப் பகுதி மக்களை தமிழ் நாடு குடிசை பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யவும் பணி மேற்கொள்கிறது.

ஆக கூவம் சீரமைப்பு என்பது கரையில் இருந்து பார்வையிடுகிற பணி அல்ல... சென்னை மாநகரத்தை செம்மைப்படுத்தும் மிக முக்கியமான ஆழ உயரங்களை அவதானித்துச் செய்ய வேண்டிய அறிவுக் கூர்மையும், சமுதாய அக்கறையும், மனித நேயப் பார்வையும், தொழில் நுட்பச் சிந்தனையும் கொண்டு செய்ய வேண்டிய பணி.

சைதையார் தீவிரப்படுத்தியிருக்கும் இந்தப் பணிகளால் விரைவில் கூவத்தின் நிறம் மாறும்... நாம் படகுப் போக்குவரத்து செய்யும்போது மனித நேயரைப் பற்றி சுத்தமான கூவத்தில் மீன்கள் சத்தமாக பேசிக் கொள்ளத்தான் போகின்றன...

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

வளரட்டும் மனித நேயம்

விளம்பர பகுதி

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon