மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: சொந்தமாக ஒரு வில்லா!

 கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: சொந்தமாக ஒரு வில்லா!

விளம்பரம்

‘நம்ப குடும்பத்துக்கும் சேர்த்தும்தான் வீடு பார்க்கப் போறோம்’ என்று ஆரம்பத்தில் என் மருமகள் அழுத்தமாக சொன்ன வார்த்தைகளின் அர்த்தம்தான் இன்னும் புரியவில்லை எனக்கு. இப்போது நான் வசிக்கும் இடம் சிங்கிள் பெட்ரூம். சொந்த பிளாட். நான், என் மனைவி, இளைய மகன் மூவருக்கும் போதுமானது. மூத்தவனுக்குக் கல்யாணத்துக்கு முன்பாகவே எங்கள் அபார்ட்மென்ட்டிலேயே முதல்தளத்தில் இருக்கும் ஒரு பிளாட்டில் தனியாக குடியமர்த்தி விட்டேன். அந்த பிளாட்டுக்கான வாடகையை மகனும் மருமகளும்தான் கொடுத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் என் சம்பந்தி வீட்டார் கோவையில் குடியேறப் போகிறார்கள் என்றதும் இப்போது என் மருமகள் ஶ்ரீ தக்‌ஷா நிறுவனத்தைப் பற்றி சகல விஷயங்களையும் சொல்ல... மகனும், மருமகளும் அவர்களுடனே குடியேறப் போகிறார்களோ என்ற சந்தேகம் ஒருபக்கம் இருந்தாலும், மகன் சொந்தமாக வீடு வாங்குகிறான் என்பது சந்தோஷமே. ஆனால், ‘நம்ப குடும்பத்துக்கும் சேர்த்தும்தான் வீடு பார்க்கப் போறோம்’ என்ற வார்த்தைகளின் அர்த்தம்தான் புரியவில்லை.

வண்டியை ஓட்டிக்கொண்டு வரும் வழியில் இப்படி பல்வேறு யோசனைகள். அலுவலகத்துக்கு வந்ததும் மகனுடன் போனில் தொடர்புகொள்ளலாம் என்று நினைத்தேன். சரி... இரவு பேசிக் கொள்ளலாம் என்று நினைத்து மாலை வீட்டுக்குச் சென்றதும் மனைவியிடம் கேட்டேன். “மூத்தவன் வந்துட்டானா?” என்றேன்.

“வருகிற நேரம்தான்” என்றாள்.

“காலையிலே உன் மருமகள் சொன்னதை கேட்டியா? நம்ப குடும்பத்துக்கும் சேர்த்தும்தான் வீடு பார்க்கப் போறோம் என்கிறாள். அதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?”

“உங்க மருமகள் லேசுப்பட்ட ஆளில்லை. காரியம் இல்லாமல் காய் நகர்ந்த மாட்டா. இல்லேன்னா... ஒரிசாவில் இருந்த வந்தவள் ஒண்ணும் தெரியாத நம் பையனைப் பிடிச்சிருப்பாளா ... இப்ப அவங்க குடும்பம் மொத்தமும் தமிழ்நாட்டுக்கு வரப் போகுது. எங்கிருந்தாலும் நல்லாயிருக்கட்டும்...”

அதற்கு மேல் பேசினால் மருமகளைப் பற்றிய வழக்கமான மாமியார்களைப் போலவே என் மனைவியும் குற்றப்பட்டியலைத் தொடங்கி விடுவாள். “சரி... காபி போடு” என்று அவளை அனுப்பிய அதேநேரம்... என் மகன் உள்ளே வந்தான். அவனைப் பார்த்த என் மனைவி, “இரு... உனக்கும் சேர்த்துப் போடறேன்” என்று சமையலறைக்குள் நுழைந்தாள்.

ஹெல்மெட்டைக் கழற்றி வைத்துவிட்டு எதிரில் அமர்ந்த மகனின் முகத்தைப் பார்த்தேன். நான் பார்ப்பதை உணர்ந்த அவன், “சொல்லுங்கப்பா... என்ன விஷயம்?”

நேரிடையாக விஷயத்துக்கு வந்தேன். “ஏம்பா உன் பொண்டாட்டி சொல்ற மாதிரி உனக்கும் கோவை ஶ்ரீ தக்‌ஷாவுல பிளாட் வாங்கற ஐடியா இருக்கா?” என்றேன்.

“ஆமாம்பா... எனக்கு மட்டுமல்ல... நம்ப எல்லாருக்கும் சேர்த்தும்தான்” - மருமகள் சொன்னதையே மகனும் உறுதியாகச் சொன்னான்.

“இந்த வீடு போதும்பா எனக்கு. தம்பிக்குக் கல்யாணம் செய்துட்டா... உன்னை தனியா வெச்ச மாதிரி அவனையும் தனியா வெச்சுடுவேன். அதுக்கப்புறம் நானும் உங்கம்மாவும்தானே... நான் எதுக்கு கோவை வரணும்?”

“இப்ப அப்படிதாம்பா சொல்வீங்க. நீங்களும் ரிட்டயர்டு ஆகற வயசை நெருங்கிட்டுதான் இருக்கீங்க. நீங்களும் ஏன் ஓய்வுக்காலத்தை எங்க மாமனார் மாதிரி அமைதியா கோவையில கழிக்கக்கூடாது?”

“எனக்கு ரிட்டயர்டு ஆன பிறகு வருகிற பணம் தம்பி கல்யாணத்துக்கும், உன் கல்யாணத்துக்கு வாங்கின கடனைத் திருப்பி தர்றதுக்கும்தான் சரியாயிருக்கும். இதுலே பிளாட் வாங்கறதெல்லாம் நடக்காத காரியம்.”

சிரித்தபடியே பதில் சொன்னான்... “இப்ப நாம உட்கார்ந்து நிம்மதியா காபி சாப்பிடற வீடு நமக்குச் சொந்தமானது எப்படின்னு யோசிச்சுப் பாருங்க... நாங்க பிறந்தபோது வாடகை வீட்டிலேதானே இருந்தோம். சென்னை கொஞ்சம் கொஞ்சமா விரிவடைஞ்சு வாடகை ஏறிட்டே இருந்தது. ஒருகட்டத்துல அந்த வாடகை வீட்டைக் காலி செய்கிற நேரம் வந்தப்போ... பல இடத்துல வாடகைக்கு வீடு தேடினோம். அந்த நேரத்துலதான் வாடகைக்கு தர்ற பணத்தைக் கணக்குப் போட்டு பார்த்தா ஒரு பிளாட்டையே வாங்கிடலாம்னு அம்மா ஒரு யோசனை சொன்னாங்க. அதுக்கேத்த மாதிரி பேங்க்கை அணுகி லோன் கேட்டு, மாதா மாதம் தவணையைக் கட்டி, இந்த பிளாட்டை வாங்கினோம். லோனும் முடியப்போகுது. இன்னிக்கு நிம்மதியா இருக்கோம். அந்த மாதிரிதான் நம்மளோட அடுத்தத் திட்டம் இருக்கணும். முடியாது என்பது ஒண்ணுமில்லைன்னு நீங்கதானே சொல்லிக்கொடுத்திருக்கீங்க” - மகன் பேச பேச ஆச்சர்யமாக இருந்தது. அவனையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“நடந்த உண்மையைத்தானே சொல்றேன். ரெண்டு மாசத்துக்கு முன்பே ஆபீஸ் விஷயமா கோயம்புத்தூர் போயிருந்தேன். என் ஃப்ரெண்ட்ஸும் நிறைய பேர் இருக்காங்க. உங்களுக்கும் தெரியும். சுவையான சிறுவாணித் தண்ணீர், குளுமையான க்ளைமேட்னு கடைசி காலத்தை நிம்மதியாகக் கழிப்பதற்கு ஏத்த சூழல் அங்கே இருக்கு. அதனால், ரிட்டயர்ட் ஆனதும் இங்கே வந்திடலாம்ங்கற நோக்கத்தோடு பலர் இங்கே இடம் வாங்கறாங்க. அதேபோல ஐ.டி. துறையில் கோவைக்கு பெரிய எதிர்காலம் இருக்கு. நாங்க ரெண்டு பேரும் ஐ.டியிலேதானே வேலை பார்க்கிறோம். முக்கியமா ‘ஶ்ரீ தக்‌ஷா’வுல வில்லா என்கிற பெயரில் தனித்தனி இடங்கள் கட்டிக்கொடுக்கிறாங்க. http://sreedaksha.com/ சைட்ல பாருங்க. அப்படி ஒரு வில்லாவை நாம ஏம்ப்பா வாங்கக் கூடாது?” என்று மகன் பேசிக்கொண்டு இருந்தபோதே...

‘நாமும் ஏன் ‘ஶ்ரீ தக்‌ஷா’வில் ஓர் இடத்தை வாங்கக்கூடாது?’ என்று நினைக்கத் தொடங்கினேன்.

பயணம் தொடரும்...

விளம்பர பகுதி

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon