மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

சட்ட விதிமீறலில் ஈடுபடவில்லை: அமலா பால்

சட்ட விதிமீறலில் ஈடுபடவில்லை: அமலா பால்

போலியான முகவரி கொடுத்து விலை உயர்ந்த கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததாக

நடிகை அமலா பால் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

புதிய மெர்சிடஸ் - எஸ் வகை கார் வாங்கியதில் அமலா பால் தவறான முகவரி கொடுத்து ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்து. இதே போன்று போலியான முகவரியில் காரை பதிவு செய்து மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் சட்ட விதி மீறலில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, கேரளாவில் நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் வெளிமாநில பதிவு எண் கொண்ட கார்கள் வைத்திருப்பவர்களின் ஆவணங்களைச் சரிபார்த்து, வரி ஏய்ப்பு செய்துள்ளார்களா என சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பால் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “என்னைப் பற்றித் தேவையற்ற யூகங்கள் வெளியாகும்போது வேடிக்கையான இந்த நகர வாழ்க்கையை விட்டு ஓடிவிடத் தோன்றுகிறது. நான் எந்த ஒரு சட்ட விதிமீறல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பதை என் நெருங்கிய நலன்விரும்பிகளிடம் டபுள் செக் செய்துகொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமலா பால் கார் பதிவு செய்ததில் எந்தவித விதிமீறலும் இல்லை என்றும் அவர் புதுச்சேரியில் குடியிருப்பதற்கான வீட்டு பத்திரத்தை முறையாகத் தாக்கல் செய்துள்ளதாகவும் புதுச்சேரி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் இன்று (நவம்பர் 01) செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். மேலும் அவர், “புதிதாக கார் வாங்குபவர்கள் அந்தக் காரை எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்துகொள்ளலாம். பின்னர் அதை ஒரு வருடத்துக்குள் உரிமையாளரின் சொந்த மாநிலத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது போக்குவரத்துத் துறை விதிமுறையில் உள்ளது. அந்த வகையில் நடிகை அமலா பால் புதுச்சேரியில் கார் பதிவு செய்ததில் தவறில்லை” என்று கூறியுள்ளார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon