மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

200 நடனக் கலைஞர்களுடன் சினேகன்

200 நடனக் கலைஞர்களுடன் சினேகன்

பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் 200 நடன கலைஞர்களுடன் நடனமாடிய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் சினிமாவுலகில் பிஸியாகி வருகின்றனர். ஓவியா, ஆரவ், ரைஸா, சுஜா வருணீ உள்ளிட்ட பலரும் படங்களில் ஒப்பந்தமாகி வருகையில் சினேகனும் அந்த ரேஸில் களமிறங்கிவிட்டார். வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் `எவனும் புத்தனில்லை’ படத்தில் 200 நடனக் கலைஞர்களுடன் சினேகன் நடனமாடியுள்ளார்.

விஜய சேகரன் இயக்கத்தில் உருவாகி வரும் இதில் நபி நந்தி, ஷரத், நிஹாரிகா, ஸ்வாசிகா, பூனம், வேல ராமமூர்த்தி, மொட்டை ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மரியா மனோகர் இசையமைக்கிறார். இப்படத்தின் தலைப்புப் பாடலை எழுதியுள்ள சினேகன் அதற்கு நடனமும் ஆடியுள்ளார். `எதுவும் தப்பு இல்லை எவனும் புத்தனில்லை’ என்று தொடங்கும் அந்தப் பாடல் காட்சியில் பூனம் கவுருடன் சேர்ந்து 200 நடனக் கலைஞர்களுடன் சினேகன் நடனமாடி இருக்கிறார்.

இந்தப் பாடல் மலேசியா மற்றும் சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon