மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

ஸ்பைஸ்ஜெட்: 100 புதிய விமானங்கள்!

ஸ்பைஸ்ஜெட்: 100 புதிய விமானங்கள்!

‘நோ ரன்வே’ என்ற திட்டத்தின் கீழ் நீரிலும், கரடு முரடான நிலப்பரப்பிலும் தரையிறங்கும் வகையில் இயங்கும் 100 விமானங்களை வாங்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

குர்கான் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் குறைந்த கட்டண விமானப் போக்குவரத்து சேவை நிறுவனம்தான் ஸ்பைஸ்ஜெட். இந்நிறுவனம் ஜப்பானின் செடோச்சி நிறுவனத்திடமிருந்து 100 விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. 400 மில்லியன் டாலர்கள் செலவில் இந்த விமானங்களை வாங்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இந்நடவடிக்கை வாயிலாக இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் தனது போட்டியை வலுப்படுத்தும் முனைப்பில் ஸ்பைஸ்ஜெட் உள்ளது.

ஸ்பைஸ்ஜெட் வாங்கவுள்ள இந்த விமானங்கள் நீரிலும் கரடு முரடான நிலப்பரப்புகளிலும் தரையிறங்கும் தன்மையைக் கொண்டிருக்கும். நவம்பர் மாத மத்தியில் நீரில் தரையிறங்குவதற்கான முன்னோட்டத்தை செடோச்சி நிறுவனம் செயல்படுத்தவுள்ளது. இதே போன்ற விமானங்களை ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகள் இந்தியாவுக்கு வழங்கத் தயாராக இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். அதன் ஒரு படியாகவே இம்முயற்சியில் ஸ்பைஸ்ஜெட் இறங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூன்று மாதங்களில் நிறைவேறும் என்று ’ஜீ நியூஸ்’ தகவல்கள் கூறுகின்றன.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon