மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

லைவ்வா? : அப்டேட் குமாரு

லைவ்வா? : அப்டேட் குமாரு

டெங்குவை ஒழிக்க வீட்டுக்கு முன்னால தண்ணி தேங்கியிருக்குன்னு வீட்டுக்கு வீடு பைன் போட்டாங்களே இப்ப ரோடு முழுக்க தண்ணியா தேங்கி கிடக்கே இப்ப யாருக்கு பைன் போடப்போறீங்க ஆபிசர்ஸ்னு நெட்டிசன்ஸ் அலப்பறையை கிளப்ப ஆரம்பிச்சுட்டாங்க. இதுல அமெரிக்கா, லண்டன்னு உதாரணம் எல்லாம் சர்வதேச அளவுல போய்கிட்டு இருக்கு. சும்மாவே பம்முற அமைச்சர்கள் எல்லாம் மழைக்கு இதமா வீட்டுலயே முடங்கியிருப்பாங்க. இதுல பாவம் நியூஸ் சேனல்ஸ் ரிப்போர்ட்டர்ஸ் தான். குளத்துக்குள்ள இறக்கிவிட்டு லைவ் காட்டிட்டு இருக்காங்க. அவங்க குடும்பத்துல உள்ளவங்கள்லாம் பதறிப்போயிருப்பாங்க. நியூஸ லைவ்வா காட்டுங்க அதுக்கு ரிப்போர்ட்டர் லைவ்வா இருக்கனும்ல. மழை வெள்ளம்னா பரவாயில்லை, தீ விபத்துலாம் வந்தா தீக்குள்ள இறக்கி விட்ருவாங்களா? பண்ணுனாலும் பண்ணுவாங்க. அப்புறம் ஹாட் பிரேக்கிங்னு ஸ்லைடு வேற போடுவாங்க. நீங்க அப்டேட்ட பாருங்க.

மெத்த வீட்டான்

ஏரியை ஆக்ரமித்து கட்டப்பட்ட வீடுகளை ஆக்ரமித்து சுற்றிவளைத்தது மழைநீர்...!

அர்ஜூன்

நம்ம வீட்ல மட்டும் கரன்ட் கட்டாகி ஈ.பி காரங்க எப்ப வருவாங்கன்னு காத்திருக்கும்போதுதான் புரியுது

வாழ்க்கையில எல்லாருமே முக்கியம்தான்னு

எந்திரப்புலவன்

குளிருதேன்னு போத்திக்கிட்டா வேர்க்கும்!

இதான்சார்_வாழ்க்கை

ஆஹான்!!

அம்மா வழியில் ஆட்சி நடத்துறோம்னு.... செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்றாதீங்கய்யா!

எதார்த்தம்

நாமக்கல் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

அப்போ விமானநிலையம்

இப்போ பேருந்துநிலையம்

அடுத்து மருத்துவமனையா...

விநிதன்

சாப்பிடும் போது மோடிக்கு நன்றி சொல்லிட்டு சாப்பிடுங்கள்-தமிழிசை

விஷத்த சாப்பிடும் போது தானே மேடம்.

Boopathy Murugesh

மழைக்கு அமெரிக்காவை விட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம் - அமைச்சர் வேலுமணி

கான்பிடன்டா பேசுறத பார்த்தா ட்ரம்ப் போட்டோ போட்டு ஸ்டிக்கர் அடிச்சுட்டாங்கன்னு நெனைக்கிறேன்..

நாயகன்

மழைவந்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும் -அமைச்சர் ஜெயக்குமார்

இதுக்குலாம் காரணம் ஸ்டாலினும் தினகரனும்தான்,

கூட்டுச்சதி அதானே..

SHIVA SWAMY.P

உயிர்போகுமாறு வலியை அனுபவிக்கும்போதுதான்,

கற்றுக்கொடுத்தவர்களின் பாடங்கள் ஒவ்வொரு பக்கமாக ஞாபகத்திற்க்கு வருகிறது....!

செல்வமணி

சாப்பிடும்போது மோடிக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிடுங்கள்-தமிழிசை

சோறு போட்டவருக்கு நன்றி சொன்னா போதும்

GST போட்டவருக்கு நன்றி சொல்ல மனமில்ல

செங்காந்தள்

குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பியவுடன் மழை பெய்து ஓய்ந்தது போல் இருக்கிறது...!!!

வாசுகி பாஸ்கர்

வட தமிழ்நாட்டை தனி மாநிலமா பிரிக்கணும்ன்னு ஒரு கோஷ்டி போஸ்டர் அடிச்சிட்டு இருக்கு.

இப்படியே போனா திண்டுக்கல்ல பிரியாணி சாப்டுட்டு கொடைக்கானல் போக பாஸ்போர்ட் எடுக்கணும் போல. திருவள்ளூரையும் அரக்கோணத்தையும் வச்சிக்கிட்டு என்னப்பா பண்ண போறீங்க

சில்ற இல்லபா

சொல்லுங்க இளங்கோவன் மழைநீர் எந்த அளவு வந்துருக்கு

இப்ப என்னோட இடுப்பளவுக்கு சார்

அப்டியே நில்லுங்க கழுத்துக்கு வரும்போது இணைப்பில் வாங்க

புன்னகை அரசன்

அம்மாவின் சமையல் அருமை பேச்சுலர்கள் ரூமில் சமைக்கும் போதும் தெரிகின்றது

விக்னேஷ்

வறுமை ஒழிப்பில் காங்கிரஸ் தோல்வி: நிதின் கட்கரி குற்றச்சாட்டு

இங்க மட்டும் என்ன வாழுதாம் ! போங்க சார் அங்கிட்டு

கோழியின் கிறுக்கல்!!‏

டிவி, மிக்ஸிலாம் இலவசமாக தருவோம்!!

ஆனால், ஒன்றுக்கு போக இரண்டு ரூபாய் வாங்குவோம்!!!

சரவணன்

இணையம் வந்துட்டு போனா நாட்ல என்ன நடந்தாலும் தெரியுது, இணையத்திலேயே இருந்துட்டா பக்கத்துல நடக்குறதுக்கூட தெரியல.

Prabakar Kappikulam

காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க உள்ளார்

கோஷ்டி சண்டையை சமாளிக்கத்தான் ஜப்பான்ல தற்காப்பு கலை கத்துக்கிட்டாரோ..?

கருப்பு கருணா

காலை சாப்பிடும்முன் மோடிக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிடுங்கள் - தமிழிசை

எதுக்கு...? தின்ற சோத்துல மண்ணள்ளி போட்றதுக்கா..?

Boopathy Murugesh

பாஜகவை சீண்டுவோர் நிம்மதியாக இருக்க முடியாது : H.ராஜா

சந்தானம் : என்னது?

H.ராஜா : இங்க பேசிட்டுருக்கேன்..

வாசுகி பாஸ்கர்

மழை வந்தா நீர் தேங்கத்தான் செய்யும் - அமைச்சர் ஜெயக்குமார்

இதை எங்கையோ கேட்ட மாதிரி இருக்குல்ல?

Yes, you are right, "போர் என்றால் உயிர் போகத்தான் செய்யும்" by ஜெயலலிதா

-லாக் ஆஃப்

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon