மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

லாவண்யா: தொடரும் ‘100% காதல்’ சிக்கல்

லாவண்யா: தொடரும் ‘100% காதல்’ சிக்கல்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 100% காதல் படத்திலிருந்து கடைசி நேரத்தில் விலகிய லாவண்யா திரிபதிக்கு பிரச்சினை வலுக்கிறது.

தெலுங்கில் சுகுமார் இயக்கிய 100% லவ் படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தை அவரே தயாரிக்கிறார். சந்திரமௌலி இயக்குகிறார். தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க ஏற்கனவே கால்ஷீட் ஒதுக்கியிருந்ததாகக் கூறி லாவண்யா கடைசி நேரத்தில் இப்படத்திலிருந்து விலகினார். இதனால் லண்டன் படப்பிடிப்புக்குத் தயாராக இருந்த படக் குழு கதாநாயகி மாற்றத்தால் படப்பிடிப்பைத் தள்ளிப்ப்போட்டது. இதனால் பண நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறித் தயாரிப்பாளர் சார்பில் லாவண்யா மீது தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தப் புகாரை அடுத்து, கடந்த திங்களன்று (அக்டோபர் 30) இரு தரப்பினரும் ஆஜராகியதாக டெக்கான் கிரானிக்கல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “படக் குழு லண்டன் செல்வதற்காக விமான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டன. லாவண்யா விலகியதால் ஒட்டுமொத்தமாக எல்லாம் ரத்து செய்யப்பட்டன. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே லாவண்யா 1.5 கோடி இழப்பீடு தர வேண்டும்” எனத் தயாரிப்பாளர் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு லாவண்யா, “சுகுமார் இயக்குவதாகக் கூறியதால்தான் நடிக்கச் சம்மதித்தேன். ஆனால் இறுதியில் சந்திரமௌலி இயக்குவதாகச் சொன்னார்கள்” என்று கூறியுள்ளார். படத்தில் ஒப்பந்தம் செய்யப்படும்போது லாவண்யாவுக்கு 5 லட்சம் முன்பணமும் கொடுக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர், நடிகை இருவரும் தெலுங்குத் திரையுலகைச் சாந்தவர்கள் என்பதால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கத்திலும் புகார் அளிக்கும்படி தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபையினர் கூறியுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon