மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

தடுமாறும் ஆடை உற்பத்தித் தொழில்!

தடுமாறும் ஆடை உற்பத்தித் தொழில்!

கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஆடைகளுக்குச் செலவிடப்படும் பணத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதோடு, ஆடைகள் வாங்குவதற்கான ஆர்வமும் குறைந்துவிட்டது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக ஜி.எஸ்.டி. சட்டமும் இன்னல்களை அதிகரித்துவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

பிரபல ஆடை வடிவமைப்பாளரான ராகுல் மிஷ்ரா ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “பணமதிப்பழிப்பு நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான திட்டமாகும். ஆனால் அத்திட்டம் சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை. ஆடை விற்பனைத் தொழிலைப் பணமதிப்பழிப்பு நடவடிக்கை பாதித்துள்ளது. எனது நிறுவனத்தில் பணிபுரியும் தையல்காரர்கள், எம்பிராய்டரி பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பல சமயங்களில் வங்கிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பணமதிப்பழிப்பு அவர்களை கடுமையாகத் தாக்கிவிட்டது” எனக் கூறினார்.

ஜூலை 1ஆம் தேதி ஜி.எஸ்.டி. சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதே பிரிவினர் மறுபடியும் பாதிக்கப்பட்டனர் என்று ராகுல் கூறுகிறார். உலகளவில் ஆடை உற்பத்தியில் இந்தியா 24 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ளது. பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. ஆகிய நடவடிக்கைகளால் இந்திய ஆடை உற்பத்தித் தொழில் தடுமாறி வருவதாகச் சமீபத்தில் ஐ.சி.ஆர்.ஏ. நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon