மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

படமாகும் கலாபவன் மணி வாழ்க்கை!

படமாகும் கலாபவன் மணி வாழ்க்கை!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகராகத் திகழ்ந்து கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்த நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு புதிய படத்தை இயக்குகிறார் மலையாள இயக்குநர் வினயன்.

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள கலாபவன் மணி, மலையாள நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பல குரல்களில் பேசும் திறன் கொண்டவர். தேசிய விருது, கேரள மாநில விருது, பிலிம் ஃபேர் விருதுகளைப் பெற்றுள்ள இவர் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மர்மமான முறையில் இறந்தார். இவருடைய மரணம் குறித்து கேரள காவல் துறையினர் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கலாபவன் மணியின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையமாகக்கொண்டு ‘சாலக்குடிக்காரன் சங்கதி’ என்ற படத்தை இயக்குகிறார் வினயன். இதற்கு முன்பு இவர், கலாபவன் மணி நடிப்பில் வெளியான கல்யாண சௌகந்திஹிகாம், இன்டிபென்டென்ஸ் அன்ட் கருமதிக்குட்டன் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜையோடு படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ள இயக்குநர் வினயன், “இப்படத்தில் கலாபவன் மணியின் முழு வாழ்க்கை வரலாற்றையும் கூறாமல் சுவாரஸ்யமான நிகழ்வுகள் மட்டுமே கூறப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon