மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

ஆசியாவில் உருவாகும் பில்லியனர்கள்!

ஆசியாவில் உருவாகும் பில்லியனர்கள்!

ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒருமுறை ஆசியாவில் புதிய பில்லியனர்கள் உருவாவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இண்டர்நேஷனல் பிசினஸ் எக்ஸ்பேன்ஷன், யுனைட்டட் பேங்க் ஆஃப் ஸ்விட்சர்லாந்து ஆகியவை இணைந்து ஆசியாவின் பில்லியனர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், “2016ஆம் ஆண்டில் ஆசியாவில் புதிதாக 117 பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். அதிகபட்சமாகச் சீனாவில் ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் ஒரு முறை புதிய பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். இந்தியா, சீனா இணைந்து ஆசியாவின் மொத்த பில்லியனர்களில் நான்கில் மூன்று பங்கு பில்லியனர்களைக் கொண்டுள்ளன. ஆசியாவின் ஒட்டுமொத்த பில்லியனர்களின் சொத்து மதிப்பானது 2016ஆம் ஆண்டில் 17 சதவிகிதம் உயர்ந்து 6 லட்சம் கோடி டாலர்கள் அதிகரித்துள்ளது.

தொழிற்துறை, நிதிச் சேவைகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாகவே ஆசியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆசியாவில் ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒருமுறை புதிய பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் உருவான பில்லியனர்களின் எண்ணிக்கை 637. இது அமெரிக்காவின் புதிய பில்லியனர்களின் எண்ணிக்கையை விட (563) அதிகமாகும். இதே நிலை நீடித்தால் அமெரிக்க பில்லியனர்களின் சொத்து மதிப்பைவிட ஆசிய பில்லியனர்களின் சொத்து மதிப்பு அதிகரிக்கும் சூழல் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon