மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

தரமற்ற உணவா? புகார் அளிக்கலாம்!

தரமற்ற உணவா? புகார் அளிக்கலாம்!

மழைக் காலங்களில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெய்துவரும் மழையின் காரணமாகத் தமிழக அரசு பல புகார் எண்களை அறிவித்துள்ளது. மழையின் பாதிப்பைச் சரி செய்ய, குப்பைகள் அதிகமாக இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த, தெருக்களில் மழை நீர் தேங்கி நின்றால் அதை வடியச்செய்ய எனத் தனித் தனியாகப் புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் குறித்த புகார்களை வாட்ஸ் அப் வழியாக அளிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை கூடுதல் ஆணையர் வனஜா தெரிவித்துள்ளார்.

“உணவகங்கள் மற்றும் கடைகளில், 50 ஆயிரம் உணவுப் பொருட்களின் தரம் குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தரமற்ற உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. உணவகங்களில் சூடான உணவுகளை மட்டும் உட்கொள்ள வேண்டும். உணவு பரிமாறுபவரின் சுகாதாரத்தையும் பார்க்க வேண்டும். நல்ல குடிநீரை அருந்த வேண்டும். உணவுப் பொருட்களின் தரம் குறித்து சந்தேகம் எழுந்தால் 94440 42322 என்ற எண்ணில், வாட்ஸ் அப் மூலமாக 24 மணிநேரமும் புகார் அளிக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon