மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

காமன்வெல்த்: இந்தியா கிளீன் ஸ்வீப்!

காமன்வெல்த்: இந்தியா கிளீன் ஸ்வீப்!

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10m ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் வென்று கிளீன் ஸ்வீப் செய்து அசத்தினர்.

காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதல் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றுவருகிறது. இன்று (நவம்பர் 1) நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஷாஸர் ரிஸ்வி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதே போட்டியில் ஓம்கார் சிங் வெள்ளிப் பதக்கமும், ஜித்து ரவி வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தினர். இதில் ஷாஸர் ரிஸ்வி ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் பூஜா கத்கர் தங்கமும், அஞ்சும் மவுட்கில் வெள்ளியும் வென்றனர். சிங்கப்பூரின் மார்டினா லின்ட்சே வெண்கலம் வென்றார்.

காமன்வெல்த் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் உட்பட 5 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது. முன்னதாக நேற்று நடைபெற்ற 10m ஏர் பிஸ்டல் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் இந்தியாவின் ஹீனா சிந்து தங்கம் வென்றிருந்தார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon