மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

பாஜக சுனாமி: அமித் ஷா

பாஜக சுனாமி: அமித் ஷா

இமாச்சலப் பிரதேசத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் சுனாமி தாக்கவிருப்பதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. டிசம்பர் 18ஆம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். அதற்காக இன்று (நவம்பர் 1) இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி நகரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பேசினார்.

அப்போது அவர், “இமாச்சலப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரவிருக்கிறது. இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு வந்துள்ள மக்கள் கூட்டத்தைப் பார்த்தால், இமாச்சலப் பிரதேசத்தை பாஜக அலை மட்டுமல்ல, பாஜக சுனாமியே தாக்கவுள்ளது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸை பாஜக சுனாமி தூக்கி எறியும்.

பாரதிய ஜனதாவின் ஆட்சி ஏற்பட்டவுடன் இமாச்சலப் பிரதேசத்தின் வளர்ச்சி புதிய உயரங்களைத் தொடும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சியில் இருக்குமாறு மக்கள் எங்களுக்குப் பெரும்பான்மையுடனான வெற்றியைத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரசும், பாஜகவும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதால் வளர்ச்சியில் வேகக் குறைவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தை காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சி செய்தால் ஊழல் மட்டுமே மிஞ்சும்” என்று அவர் பேசினார்.

இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான பிரேம் குமார் துமால் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon