மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

சின்னத்தை முடக்க திமுகவுடன் தினகரன் கூட்டு!

சின்னத்தை முடக்க திமுகவுடன் தினகரன் கூட்டு!

இரட்டை இலைச் சின்னத்தை முடக்க திமுகவுடன் தினகரன் கூட்டு வைத்துள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லியில் நேற்று (அக்.31) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இரட்டை இலை நிச்சயம் எங்களுக்குத்தான் கிடைக்கும். இதனால், திமுகவுடன் கூட்டு சேர்ந்து குறுக்கு வழியில் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என தினகரன் சதி செய்கிறார்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

“கடந்த காலங்களில் ஸ்டாலினும் தினகரனும் இணைந்து பல்வேறு சதிகள் செய்தபோதும்,அவை முறியடிக்கப்பட்டன. வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற தினகரனின் எண்ணம் நிறைவேறாது” என்று சொன்ன ஜெயக்குமார், இரட்டை இலையை முடக்க முடியாது என உறுதிப்படக் கூறினார்.

மழை முன்னேற்பாடுகள் குறித்த கேள்விக்கு, “குளத்தைத் தூர்வாருவது, ஏரிகளைத் தூர்வாருவது போன்ற பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றுள்ளன. சென்னையில் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon