மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பட்டியல்!

தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பட்டியல்!

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் யார் என்பது குறித்த விவரங்கள் வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கரைஞர் அஸ்வினி குமார் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவின்படி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சிறைத் தண்டனை முடிந்த பிறகு, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது.

இதற்கு பதிலாக குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவினை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மிக முக்கிய அம்சங்களாக உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பதிலாக குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவினை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மிக முக்கிய அம்சங்களாக உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஆயுள்காலத் தடை விதிக்கும் விவகாரத்தில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காததற்காக தேர்தல் ஆணையத்தை நீதிபதிகள் கண்டித்தனர். அப்போது மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ஆயுள்காலத் தடை விதிக்கக்கோரும் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல; அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட மனுக்கள் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு நேற்று (அக்.31) விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

குற்ற வழக்குகளில் அரசியல்வாதிகள் எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தொடர்பான புள்ளிவிவரங்கள், இந்த விவகாரத்தில் புதிய பரிமாணத்தைத் தரும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

முன்னதாக, நடந்த விசாரணையில் 34 சதவிகித சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக உள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

வழக்குகள் மீதான வாதம் இன்றும் (நவ.1) நடைபெறவுள்ளது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon