மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

வேலைக்காரன் டபுள் சர்ப்ரைஸ்!

வேலைக்காரன் டபுள் சர்ப்ரைஸ்!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் வேலைக்காரன் படத்தின் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அதில் இடம்பெறும் இரண்டு பாடல்களை நாளை (நவம்பர்2) வெளியிட உள்ளனர்.

அனிருத் இசையமைத்துப் பாடிய கருத்தவன்லாம் கலீஜா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாடலாக `இறைவா’ பாடலை நவம்பர் 2 ஆம் தேதி வெளியிட இருப்பதாகப் படக்குழு அறிவித்திருந்தது. தற்போது படத்தில் இடம்பெறும் மூன்றாவது பாடலான `உயிரே’ பாடலையும் நாளை வெளியிட இருப்பதாக அனிருத் அறிவித்துள்ளார். அந்த இரண்டு பாடல்களின் முத்தாய்ப்பான வரிகளை வெளியிட்டுள்ளனர். அவ்வரிகள் பகிரப்பட்டுவருகின்றன. உயிரே பாடலில்,

உயிரே என் உறவே...உன்னை விட்டுப் போவதும் சாவதும் ஒன்றுதான்

இரவே என் பகலே...இனி வரும் நாளெல்லாம் உன்விழி முன்புதான்

என்கிற வரிகளும், இறைவா பாடலில்,

இருக்கும் வரை போராடலாம்...எரிமலையிலும் நீராடலாம்

உயிர் விடும் வரை உன்னோடு தான்...நீ இல்லாவிட்டால் உடல் மண்ணோடு தான்

என்பன போன்ற வரிகளும் பாடலுக்கான எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளன. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் வேலைக்காரன் திரைப்படம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக டிசம்பர் 22ஆம் தேதி வெளிவரவுள்ளது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon