மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

அரசுப் பள்ளிக் கட்டடம் இடிந்து விபத்து!

அரசுப் பள்ளிக் கட்டடம் இடிந்து விபத்து!

மழையின் காரணமாக செங்கல்பட்டில் அரசுப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.

தமிழக அரசின் 2014-2015 கணக்கெடுப்பின்படி அரசு ஆரம்பப் பள்ளிகள் 23928, நடுநிலைப் பள்ளிகள் 7260, உயர்நிலைப் பள்ளிகள் 3044, மேல் நிலைப் பள்ளிகள் 2727, இருப்பதாகத் தெரியவந்தது. இந்தப் பள்ளிகளில் வகுப்பறை வசதி இல்லாமலும் , சேதமடைந்த கட்டடங்களோடும் , இயங்கி வந்த பல அரசுப் பள்ளிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் மூடப்பட்டுள்ளன. அதுபோன்று மழைக் காலம் என்றாலே அரசுப் பள்ளிகளின் கட்டடம் இடிந்து விழுந்து சேதமடைவது தொடர்கதையாகிவிட்டது.

செங்கல்பட்டு அடுத்துள்ள ஓமலூரில் அரசுப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 30 ஆண்டு பழைமையான இந்தப் பள்ளியின் 3 மாடிக் கட்டடத்தின் 2 மாடிகள் இடிந்து விழுந்துள்ளது. மழையின் காரணமாக இன்று (நவம்பர் 1) பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் எந்த ஒரு உயிர்ச் சேதமோ , காயப்படுதலோ நிகழவில்லை. இருப்பினும் இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் பழைமையான அரசுப் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து சீர் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon