மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

காலா படப்பிடிப்பை முடித்த ஹியுமா

காலா படப்பிடிப்பை முடித்த ஹியுமா

காலா படத்தில் ஹியுமா குரேஷி சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு மும்பையிலிருந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளது.

காலா படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுவருவதால் படம் வெளியீடு தொடர்பான வதந்திகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. 2.0 படத்திற்குப் பிறகு தான் காலா வெளியீடு இருக்கும் என ரஜினி கூறிய பிறகு அதற்குள் செல்ல வேண்டாம். மும்பையில் பரபரப்பாக நடைபெற்ற படப்பிடிப்பில் ஹியுமா, நானா படேகர் பங்குபெறும் காட்சிகள் நிறைவடைந்துள்ளன.

இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில் “கடந்த ஞாயிறு (29 அக்டோபர்) மும்பை புறநகர் பகுதியிலுள்ள நெடுஞ்சாலை மற்றும் பிரபலமான கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஹியுமா கலந்துகொண்டார். அவரது காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டுவிட்டதால் அன்றிரவு அங்குள்ள ஓய்வு விடுதியில் சிறிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இயக்குநர் ரஞ்சித், ஒளிப்பதிவாளர் முரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படக்குழுவோடு பணியாற்றியது நெகிழ்வான தருணமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வந்த படக்குழு இன்னும் சில தினங்களில் இங்கு மீண்டும் படப்பிடிப்பை தொடர உள்ளது. அதில் ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon