மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

ஜியோவால் வருவாய் இழந்த ஏர்டெல்!

ஜியோவால் வருவாய் இழந்த ஏர்டெல்!

கட்டணக் குறைப்பு, சந்தையில் அதிக போட்டி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏர்டெல் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 77 சதவிகித வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்புச் சேவை நிறுவனமான ஏர்டெல், கடந்த ஒரு ஆண்டாகவே கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. தொலைத் தொடர்புச் சந்தையில் புதிதாகக் களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய சலுகைகளால் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களை இழக்கத் தொடங்கியது. மேலும், ஜியோவுக்கு ஈடாக கட்டணக் குறைப்பில் ஈடுபட்டதால் வருவாய் இழப்பு அதிகரிக்கத் தொடங்கியது. ஜூலை - செப்டம்பர் மாதங்களில் ஏர்டெல் நிறுவனம் ரூ.3.43 பில்லியன் ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது. இது 2016ஆம் ஆண்டின் இதே காலகட்ட வருவாயான ரூ.14.61 பில்லியனை விட 77 சதவிகிதம் குறைவாகும்.

உலகளவில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் 17 நாடுகளில் சேவை வழங்கி வரும் ஏர்டெல் நிறுவன ஒட்டுமொத்த வருவாய் 11.7 சதவிகிதம் சரிந்து ரூ.217.77 பில்லியனாக உள்ளது. ஏர்டெல் நிறுவனத்தைப் போலவே ஐடியா, வோடஃபோன் போன்ற இதர நெட்வொர்க் நிறுவனங்களும் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon