மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

நீர் நிலை மராமத்து ஊழல்!

நீர் நிலை மராமத்து ஊழல்!

நீர் நிலைகளை மராமத்து செய்வதற்காக தமிழக அரசு ஏற்கனவே ஒதுக்கிய 400 கோடி ரூபாய் நிதி என்ன ஆனது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி கேட்டிருக்கிறார்.

திருச்சியில் குண்டூர் ஊராட்சியில் திமுகவினரால் தூர்வாரப்பட்ட குளத்தைப் பார்வையிட இன்று (வம்பர் 1) வந்தார் மு.க.ஸ்டாலின். அந்தக் குளத்தை இன்று சுற்றிப் பார்த்த ஸ்டாலின்...திருச்சி சுற்று வட்டாரத்தில் மழை பாதிப்புகள் பற்றியும் திமுகவினரிடம் கேட்டறிந்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசியவர்,

‘இதுவரை குட்கா ஊழல்தான் நடந்திருக்கிறது என்று நினைத்திருந்தோம். இப்போது மராமத்து ஊழலும் நடந்திருக்கிறது. நீர் நிலைகளை மராமத்து செய்வதற்காக தமிழக அரசு 400 கோடி ரூபாய் ஒதுக்கியது. அதன்படி பணிகள் நடந்திருந்தால் இன்று மழை பெய்த நிலையில் இந்த அளவுக்கு தண்ணீர் எல்லா இடங்களிலும் தேங்கியிருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

அப்படியென்றால்...தமிழக அரசு ஒதுக்கிய அந்த 400 கோடி ரூபாய் என்ன ஆனது என்பது பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும்... ‘நமது தெர்மகோல் புகழ் அமைச்சர் செல்லூர் ராஜு கொடுத்த யோசனையில் வெள்ள நீரின்மேல் தெர்மகோலை போட்டு மூடிவிடலாம் என்று கருதிவிட்டார்களா என்னவோ?’ என்று கிண்டலாக குறிப்பிட்டார் ஸ்டாலின்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon