மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

போலியான எல்.இ.டி. பல்புகள் விற்பனை!

போலியான எல்.இ.டி. பல்புகள் விற்பனை!

இந்தியாவில் விற்பனையாகும் எல்.இ.டி. பல்புகளில் 76 சதவிகித பல்புகள் போலியானவை என்று நெய்ல்சன் ஆய்வறிக்கை கூறியுள்ளது.

அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது: ‘இந்தியாவில் விற்பனையாகும் எல்.இ.டி பல்புகளில் 76 சதவிகித பல்புகள் இந்திய அரசு நிர்ணயித்துள்ள தர நிர்ணயங்களுக்கு ஏற்றவாறு இல்லை. கடைகளில் விற்பனையாகும் 48 சதவிகித பல்புகளில் தயாரிப்பாளர்களின் முகவரி இல்லை. 31 சதவிகித பல்புகளில் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் கூட இல்லை.’

மின் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் எல்.இ.டி. பல்புகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் இத்தகைய எல்.இ.டி. பல்புகள் போலியாக தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவது இந்திய அரசின் திட்டங்களான ’மேக் இன் இந்தியா’ மற்றும் எளிய முறையில் தொழில் தொடங்கும் திட்டம் போன்றவற்றிற்கு எதிராக அமைகிறது.

இந்திய எல்.இ.டி. பல்புகள் சந்தையின் மதிப்பு ஆண்டுக்கு ரு.6,477 கோடியாக உள்ளது. மும்பை, ஹைதராபாத், டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள சுமார் 200 சில்லறை விற்பனை நிலையங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon