மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

சென்னை : ரயில்களின் நேரத்தில் மாற்றம்!

சென்னை : ரயில்களின் நேரத்தில் மாற்றம்!

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள புதிய கால அட்டவணைப்படி இன்று (நவம்பர் 1) முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து இயக்கப்படும் 57 ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக ரயில்கள் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நேற்று (அக்டோபர் 31) அறிவித்தது. அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து மதுரை வைகை விரைவு ரயில் இன்று(நவம்பர் 1) மதியம் 1.40 ( பழைய நேரம் 1.30), கன்னியாகுமரி விரைவு ரயில் மாலை 5.15 (பழைய நேரம் 5.30), ராமேஸ்வரம் விரைவு ரயில் மாலை 5.50 (பழைய நேரம் 5.45), செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் இரவு 9.05 (பழைய நேரம் 8.55), மன்னார்குடி மன்னை விரைவு ரயில் இரவு 9.20 (பழைய நேரம் 10.00), மதுரை பாண்டியன் விரைவு ரயில் இரவு 9.40 (பழைய நேரம் 9.20), காரைக்கால் ரயில் இரவு 10.05 (பழைய நேரம் 11.15), மதுரை ரயில் இரவு 10.40 (பழைய நேரம் 10.45), தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில் இரவு 10.30 (பழைய நேரம் 11.30), மங்களூர் விரைவு ரயில் இரவு 11.15 (பழைய நேரம் 10.15), திருச்சி மலைக்கோட்டை விரைவு ரயில் இரவு 11.30 (பழைய நேரம் 10.30) புறப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் கோவை விரைவு ரயில் காலை 6.10மணிக்கு புறப்பட்டுச் சென்றது மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் விரைவு ரயில் பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு சென்றது, ஆலப்புழை விரைவு ரயில் இரவு 8.55 (பழைய நேரம் 8.45), மேட்டுப்பாளையம் நீலகிரி விரைவு ரயில் இரவு 9.05 (பழைய நேரம்9.15), மைசூரு காவேரி விரைவு ரயில் இரவு 9.15 (பழைய நேரம் 9.00) என மொத்தம் 57 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு - திருமால்பூர், சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், சென்னை கடற்கரை - திருவள்ளூர் இடையே இன்று முதல் புதிய மின்சார ரயில் சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon