மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

ரயில் பயணி கன்னத்தில் அறை : டிடிஆர் கைது!

ரயில் பயணி கன்னத்தில் அறை : டிடிஆர் கைது!

மும்பையில் நேற்று டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தவரை அறைந்த டிடிஆர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை தாதர் மத்திய ரயில் நிலையத்தில் 5வது நடைமேடையில் நேற்று (அக்டோபர் 31) மாலை டிக்கெட் பரிசோதகர் அஜித் பிரசாத் (39) டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த வழையாக டிக்கெட் இல்லாமல் தீரஜ் அகர்வால் என்பவர் பயணித்து வந்துள்ளார். அவரிடம் அஜித் பிரசாத் டிக்கெட்டை கேட்டுள்ளார். தீரஜ் அகர்வால் டிக்கெட் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் பிரசாத் அவரை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அபராதம் செலுத்தும்படி கேட்டுள்ளார். அபராதம் செலுத்த அகர்வால் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அகர்வால் அலுவலகத்தில் இருந்து வெளியேற முயற்சி செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரசாத் அவரை அறைந்துள்ளார். அதைத்தொடர்ந்து அகர்வால் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். பிரசாத் மீது பிரிவு 323 மற்றும் 342-ன் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். போலீஸார் அவரை இன்று (நவம்பர் 1) நீதிமன்றத்தில் ஆஜர் செய்கின்றனர்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon