மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

மகனுக்காக களமிறங்கும் தம்பி ராமையா

மகனுக்காக களமிறங்கும் தம்பி ராமையா

பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருபவரும், வடிவேலுவை வைத்து இந்திர லோகத்தில் நா.அழகப்பன் படத்தை இயக்கியவருமான நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா, தற்போது மகன் உமாபதியை நாயகனாக வைத்து இயக்கி வருகிறார்.

தேன்மொழி சுங்குரா தயாரிக்கும் `உலகம் விலைக்கு வருகிறது’ படத்தில் உமாபதிக்கு ஜோடியாக மலையாள நடிகை மிருதுளா முரளி நடிக்கிறார். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, ஓய்.ஜி. மகேந்திரன், பவன், ராஜேந்திரன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தினேஷ் இசையமைக்க பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் மலையக்கோவில் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு முதல்நாள் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. தப்பட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் என நூற்றுக்கணக்கான கிராமியக் கலைஞர்களோடு நடன இயக்குநர் தினேஷ் வடிவமைப்பில் படமாக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டையைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon