மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

ரகசியத்தை உடைத்த ஸ்ரீகாந்த்

ரகசியத்தை  உடைத்த ஸ்ரீகாந்த்

பிரெஞ்ச் ஓப்பன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே, தனது வெற்றியின் ரகசியம் என்று கூறியுள்ளார்.

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓப்பன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீரர் நிஷிமோட்டோவை வீழ்த்தி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். அதன் மூலம் ஸ்ரீகாந்த், ஒரே வருடத்தில் 4 சூப்பர் சீரியஸ் பட்டங்களை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். மேலும், சர்வதேசத் தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

தொடரை முடித்து இந்தியா திரும்பிய ஸ்ரீகாந்த், ஐதராபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்த ஆண்டில் நான்கு சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. நான் தரவரிசைக்காக விளையாட விரும்பவில்லை. ஒவ்வொரு தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எனது நோக்கமாகும்." என்று கூறினார்.

மேலும், "கடந்த இரண்டு வாரங்கள் எனக்கு மிகவும் அற்புதமாக அமைந்தது. சென்ற ஆண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்தேன். காயம் என்பது எல்லா விளையாட்டு வீரர்கள் வாழ்க்கையிலும் வருவதுதான். அதிலிருந்து மீண்டு தற்போது பட்டம் வென்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நான் நம்பிக்கையுடன் மீண்டு வர என்னுடைய பயிற்சியாளர் கோபி சந்த் தான் முக்கிய காரணம். இதன் எல்லாப் பெருமையும் அவரையே சேரும்" என்று தனது வெற்றிக்கான ரகசியத்தைப் பகிர்ந்துள்ளார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon