மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

மதவாதம் எங்கே வந்தாலும் எதிர்ப்போம்!

மதவாதம் எங்கே வந்தாலும் எதிர்ப்போம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலத் தலைமை அலுவலகத்தின் வாசலில் நேற்று பாஜகவின் மாணவர் பிரிவினர் நடத்திய ஒரு ஆர்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் கொடியையும், கேரள முதல்வர் பினராயி விஜயனின் உருவப்படத்தையும் எரித்தனர்.

இதைக் கண்டித்து இன்று (நவம்பர் 1 )காலை சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கொட்டும் மழையிலும் ஆர்பாட்டம் நடத்தினர்.

’செங்கொடி எங்கள் ரத்தம்... கொடியை எரித்தால் கொள்கையை எரிக்க முடியாது’ போன்ற முழக்கங்கள் ஆர்பாட்டத்தில் மிகுந்த உணர்ச்சியோடு முழங்கப்பட்டன.

அப்போது பேசிய கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘’ஆர் எஸ் எஸ், பாஜக, சங் பரிவாரங்கள் அவர்களது தலைவர் அமித் ஷா தலைமையில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தினார்கள்.

இப்போது அவர்களது பரிவாரங்கள் இங்கே எங்கள் அலுவலகத்தின் முன் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.

பாஜகவின் கடந்த மூன்றவரை வருட ஆட்சியில் முழு தோல்வி அடைந்துவிட்டனர். பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி போன்ற பொருளாதாரச் சீர்கேடு நடவடிக்கைகளால் இந்திய மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியிருக்கும் பாஜகவினர்...அந்த பிரச்னையை திசை திருப்ப மதவாத வன்முறை அரசியலை இந்தியாமுழுதும் தூண்டிவிட்டுள்ளனர்.

கேரளாவில் அவர்களின் முயற்சி முழு தோல்வி அடைந்துவிட்டந்தால் அந்த கோபத்தில் இங்கேயும் வன்முறையை கையிலெடுத்துள்ளனர்.

இந்தியாவில் எங்கே மதவாதம் தலை தூக்கினாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அதை உறுதியோடு எதிர்த்துப் போராடும்.

நேற்று நடந்த ஆர்பாட்டத்தில் கட்சியின் கொடியையும், கேரள முதல்வரின் படத்தையும் எரித்தவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். பாஜகவை மட்டுமல்ல...பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும் அதிமுக அரசையும் கண்டிக்கிறோம்’’ என்றார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon