மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

மீண்டும் நஸ்ரியா: ரசிகர்கள் உற்சாகம்!

மீண்டும் நஸ்ரியா: ரசிகர்கள் உற்சாகம்!

மூன்றாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அஞ்சலி மேனன் இயக்கவுள்ள படத்தின் மூலம் மீண்டும் நடிப்புலகுக்குத் திரும்பியுள்ளார் நஸ்ரியா.

2014ஆம் ஆண்டு மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலைத் திருமணம் செய்துகொண்ட பின்னர் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவந்த நஸ்ரியா தற்போது, ‘பெங்களூர் டேஸ்’ படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் இயக்கவுள்ள அடுத்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரித்வி ராஜ் நாயகனாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் நஸ்ரியா, பார்வதி இருவருமே நாயகிகளாக நடிக்கவுள்ளார்கள். இதன் படப்பிடிப்பு நவம்பர் 1ஆம் தேதி ஊட்டியில் தொடங்கவுள்ளது.

நஸ்ரியா நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ஃபகத் ஃபாசில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியிருந்த நிலையில், அந்தத் தகவலை தற்போது நஸ்ரியா தனது முகநூல் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அந்த பதிவில் அவர், “உங்களுடைய அடுத்தப் படம் எப்போது என்ற கேள்வி நான் ‘பெங்களூர் டேஸ்’ நடித்தபோதிலிருந்தே என்னிடம் கேட்கப்பட்டு வருகிறது. இப்போது பிரித்வி ராஜ், பார்வதியுடன் நானும் அஞ்சலி மேனன் படத்தில் நடிக்கவுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை உண்டாக்கியுள்ளதோடு படம் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு எம்.ஜெயசந்திரன் மற்றும் ரகு தீட்சித் இசையமைக்க, லிட்டில் ஸ்வாயாப் ஒளிப்பதிவாளராகவும், ப்ரவீன் பிரபாகர் எடிட்டராகவும் பணிபுரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon