மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கீடு!

தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கீடு!

புதுச்சேரியில் படகுப் பயண சேவைகள் உள்ளிட்ட பணிகளுக்காக 14 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அக்டோபர் 31ஆம் தேதியன்று டெல்லியில் அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், “புதுச்சேரியில் தூர்வாரும் பணிகளுக்காக 14 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 7 கோடி ரூபாய் புதுச்சேரி அரசின் பங்களிப்பாக இருக்கும். மத்திய கப்பல்துறை அமைச்சகம் 7 கோடி ரூபாய் வழங்கும்” என்று அவர் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து புதுச்சேரி, கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரம் வரை படகுப் போக்குவரத்து சேவைகளைத் தொடங்கும் பணிகளும் இத்திட்டத்தில் அடங்கும் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதற்கான படகுத் துறைமுகங்களை அமைக்க சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதின் கட்கரி மேலும் பேசுகையில், “படகுத் துறைமுகங்களை அமைப்பதற்கு 50 சதவிகித மானியம் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். இதனால் இப்பகுதிகளுக்கு இடையேயான போக்குவரத்து மேம்படுவது மட்டுமல்லாமல், சுற்றுலாத்துறையும் வளர்ச்சியடையும்” என்று அவர் கூறினார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon