மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

மாணவியின் கனவை நனவாக்கும் கிராம மக்கள்!

மாணவியின் கனவை நனவாக்கும் கிராம மக்கள்!

உத்தரப்பிரதேசத்தில் வறுமையின் கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற குடும்பத்தைக் காப்பாற்றிக் குழந்தைகளின் கனவை நிறைவேற்றியுள்ளனர் அக்கிராம மக்கள்.

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் அருகே இந்திராபுரத்தைச் சேர்ந்தவர் காஜல் ஜா(17). ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் 12ஆம் வகுப்பில் 95 சதவிகித மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால், குடும்ப வறுமை காரணமாக 12ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டார். ஆனால், ஐஐடியில் படிக்க வேண்டும் என்பதே அவரது கனவு. இவருடைய மூத்த சகோதரர் ஐஐடியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், வறுமை காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதை அறிந்த ஊர் கிராம மக்கள் பிள்ளைகளின் படிப்புக்கு உதவுதாக கூறி ஆறுதல் கூறியுள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் 40க்கும் மேற்பட்ட மக்கள், தங்களது சொந்தப் பணம் மற்றும் சமூக வலைதளம் மூலம் பணம் திரட்டி படிப்பதற்கு உதவி செய்துள்ளனர். முதலில் காஜல் ஐஐடி தேர்வில் வெற்றி பெற பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார். இதற்காக ரூ.20 ஆயிரம் அளித்துள்ளனர். மேலும், அவரின் சகோதரர் கல்விக்கும் உதவி செய்வதாக தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், அவரின் தந்தைக்கும் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராக பணி வாங்கி கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து காஜல் கூறுகையில், “நான் பள்ளியில் படித்த காலத்தில், எனது தந்தை, சகோதரர், முதியவர்கள் தொடர்ந்து நோயால் அவதிப்பட்டு வந்தனர். அதற்கு அதிகளவில் செலவு ஏற்பட்டது. இதனால், எங்களது குடும்ப நிதி நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வந்தது” எனக் கூறினார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon