மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

நடிகை தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்!

நடிகை தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்!

‘என் மகளைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டனர்’ என்று நடிகை பிரதியுஷாவின் தாய் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவந்த பிரதியுஷா 2002ஆம் ஆண்டு தன் காதலருடன் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி வெளியானது. ஆனால், உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்ட அவருடைய காதலர் பிழைத்துக்கொண்டார். இதன் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், “பிரதியுஷா தற்கொலை செய்யவில்லை, அவளை கொலை செய்துவிட்டார்கள். அதை மூடி மறைக்கிறார்கள்” என்று அவருடைய தாயார் சரோஜினி கூறியுள்ளார். இது தொடர்பாக இரு தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “என் மகள் விஷம் குடித்துத் தற்கொலை செய்யவில்லை. அவளைப் பலர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கொலை செய்துவிட்டு அவளின் வாயில் விஷத்தைத் தடவி நாடகத்தை நடத்தியுள்ளனர். அவளின் உடல் முழுவதும் அதற்கான காயங்களும் பலரின் நகக் கீறல்களும் காணப்பட்டன. ஆனால், என் மகள் தற்கொலை செய்துகொண்டாள் எனக் கூறி இந்த வழக்கை முடித்துவிடுவார்கள். பல வருடமாகத் தீர்ப்பு கிடைக்கும் என போராடிவரும் எனக்கு யாருடைய துணையும் கிடைக்கவில்லை. என் மகளுக்கு ஆதரவாக காவல்துறையினரும் இதுவரையில் எந்த ஓர் ஆதாரத்தையும் சேகரிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon