மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

வசீகரமான ஆண்களுக்குச் சில டிப்ஸ் - பியூட்டி ப்ரியா

வசீகரமான ஆண்களுக்குச் சில டிப்ஸ் - பியூட்டி ப்ரியா

“பார்த்தவுடன் வசீகரித்துவிட்டானடி..” என்று சொல்லும் அளவுக்கு ஆண்கள் இருக்க வேண்டுமென பெண்கள் விரும்புவார்கள். குறிப்பாக பெண்கள் சுத்தமான, மிடுக்கும் கம்பீரமும் உடைய ஆண்களையே விரும்புவார்கள்.

புத்துணர்ச்சியுடனும் இருக்கும் ஆண்களையே பெண்கள் விரும்புவர். வெளித்தோற்றத்தில் அழகாகவும் புத்துணர்ச்சியாகவும் பார்த்தவுடன் அழகாகக் காட்டும் சில விஷயங்கள் உண்டு. அவற்றை சரிசெய்தாலே நீங்கள் பெண்களைக் கவரும் ஆண்களாக மாறிவிடலாம்.

அழகான ஆண்களே... நீங்கள் அட்டகாசமான ஆண்களாக, பெண்கள் மனதில் மட்டுமல்ல எல்லோரிடத்தும் திகழ வேண்டுமா...

தலையில் உள்ள பொடுகை நாம் சாதாரணமாக நினைத்துக்கொண்டு அலட்சியப்படுத்துகிறோம். அது தலையில் திட்டு திட்டாகப் பரவி, நம்மை பார்ப்பவர்களையே முகம் சுழிக்க வைக்கச் செய்துவிடும். எனவே, பொடுகு பிரச்னையை சரிசெய்வது நல்லது. அதற்குத் தகுந்த மருத்துவரைத் தொடர்புகொண்டு சிகிச்சை பெறுதல் நலம்.

மூக்கு மற்றும் காதுகளில் சிலருக்கு முடிகள் முளைத்திருக்கும். அது பார்ப்பவர்களுக்கு அருவருப்பாகத் தோன்றும். இந்தத் தன்மையே பலரை அவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். எனவே, வாரம் ஒருமுறையோவது அவற்றை கவனித்து சுத்தம் செய்வது நல்லது. தாடி மற்றும் மீசையையும் அவ்வப்போது சீராக்குதல் நலம்.

பற்களில் மஞ்சள் கறை படிந்திருந்தால் எலுமிச்சைச் சாறுடன் உப்பு கலந்து தேய்ப்பது போன்ற சில எளிய வழிமுறைகளை வீட்டிலேயே பின்பற்றுவதன் மூலம் மஞ்சள் கறையை அகற்றலாம். சிகரெட், பாக்கு, புகையிலை போன்றவை பயன்படுத்தாமல் இருப்பதும் நலம்.

வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள போது மாய்ச்சரைஸர்களை உபயோகப்படுத்துவது நல்லது. வீட்டிலேயே எளிய வழிமுறைகளைக் கையாண்டு அவற்றை அகற்ற முடியும். அதனால் எந்த பின்விளைவுகளும் உண்டாவதில்லை. அதேசமயம் உங்களுடைய பணமும் மிச்சமாகும்.

வீட்டிலேயே, தேன், கிளிசரின், வெண்ணெய் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி, பெண்கள் விரும்புகிற அழகிய, மென்மையான உதடுகளை நீங்கள் பெற முடியும்.

ஒருவர் எவ்வளவு சுத்தமானவர் என்பதை அவர்களின் கை மற்றும் கால் நகங்களை கொண்டெ தெரிந்துகொள்ளலாம். பெண்கள் உங்கள் கைவிரல் நகங்களையும் கால் நகங்களையும் கவனிப்பார்கள். நகங்களில் உள்ள அழுக்குகளே உங்கள் சுகாதாரத்தைப் பற்றி சொல்லிவிடும்.

அதனால் அவ்வப்போது கை மற்றும் கால் நகங்களில் உள்ள அழுக்குகளைச் சுத்தம் செய்யுங்கள். வாரம் ஒருமுறை எலுமிச்சை மற்றும் உப்பு கலந்த நீரில் விரல் நகங்களை ஊறவைத்துக் கழுவுங்கள். அது உங்கள் நகங்களைப் பளிச்செனவும் மென்மையானவும் வைத்திருக்கும்.

பெர்பியூம் பயன்படுத்தும் ஆண்களை, பெண்கள் அதிகம் விரும்புவர். அதற்காக, அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி அருகில் இருப்பவர்களை எரிச்சலடையச் செய்ய கூடாது என்பதை கவனித்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படியே, இதைப் படித்துக்கொண்டே கண்களில் புன்னகை சிந்த பார்க்கும் ஆண்களுக்கும், தன்னுடைய ஆண் நண்பர்களுக்கு இதை ஷேர் செய்யப் போகும் பெண்களுக்கும் நன்றி!

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon