மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

தினம் ஒரு சிந்தனை: கருத்துகள்!

தினம் ஒரு சிந்தனை: கருத்துகள்!

தனிநபர்களை எளிதாகக் கொன்று விட முடியும். ஆனால், அவர்களின் கருத்துகளைக் கொல்ல முடியாது.

- பகத்சிங் (28 செப்டம்பர் 1907 – 23 மார்ச் 1931). இந்திய விடுதலைப் போராட்ட வீரர். இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளராக இருந்தவர். ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்பதே இவரது தாரக மந்திரமாக இருந்தது. துப்பாக்கியும் புத்தகங்களும் இவரது நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஏராளமான இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்து விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பங்குபெறச் செய்தார். ‘தி டோர் டு டெத்’, ‘ஐடியல் ஆப் சோஷலிஸம்’ போன்ற நூல்களை எழுதினார். சிறையில் இந்தியக் கைதிகளுக்கும் ஐரோப்பியக் கைதிகளுக்கும் சம உரிமை வழங்க வலியுறுத்தி 116 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர், விடுதலைப் போராட்டச் சின்னமாக உருமாறி அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon