மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

ஆக்கிரமிப்பாளர்களுக்கு நன்றி: கனிமொழி

ஆக்கிரமிப்பாளர்களுக்கு நன்றி: கனிமொழி

தமிழகத்தில் பருவமழை தொடங்கி ஓரிரு நாள்களே ஆகும் நிலையில், பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளன. போதிய முன்னேற்பாடுகளை அரசு எடுக்காததே இதற்குக் காரணம் எனப் பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர் .

இந்த நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது முகநூல் பக்கத்தில், ‘தற்போதுதான் பருவமழை துவங்கியுள்ள நிலையில், வெள்ளத்தில் மூழ்கியுள்ள அத்திப்பட்டு புதுநகர் பகுதி, எண்ணூர் கழிமுகத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள வள்ளூர் அனல்மின் நிலையம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் காமராஜர் துறைமுகத்திற்கு நன்றி’ எனத் தமிழக அரசை விமர்சித்து கருத்து பதிவு செய்துள்ளார்.

எண்ணூர் கழிமுகத்தின் சாம்பல் கழிவுகள் கலக்கப்படுவதால் மாசுபடுவதோடு அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். எண்ணூர் கழிமுகத்தை தூர்வார வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பல்வேறு அரசியல் தலைவர்களும் கழிமுகத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட நிலையில், கழிமுக ஆக்கிரமிப்பைச் சுட்டிக்காட்டும் விதமாகத் தனது கருத்தை கனிமொழி வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஆக்கிரமிப்பு காரணமாக அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது தொடர்பான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon