மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

வளரும் மின் உற்பத்தித்துறை!

வளரும் மின் உற்பத்தித்துறை!

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் வாயிலான மின் உற்பத்தி கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளதால், சோலார் மற்றும் காற்றாலைகள் வாயிலான மின்சாரக் கொள்முதல் விலை பல மடங்கு குறைந்துள்ளது என்று ஃபிட்ச் ரேட்டிங்ஸ் ஆய்வறிக்கை கூறுகிறது.

இதுகுறித்து அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘கடந்த பத்தாண்டுகளில் உலகளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி பலமடங்கு அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டு கணக்குப்படி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள்மூலம் 770 கிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட ஆறு மடங்கு அதிகமாகும். இதனால் சோலார் மற்றும் காற்றாலைகள் வாயிலான மின் கொள்முதல் விலை குறைந்து வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதிகரித்துள்ளதால் இத்துறையில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. உள்ளூர் அளவிலான விநியோகிக்கும் முறை, சுய வளர்ச்சி போன்ற காரணங்களாலும் மின் உற்பத்தி இத்துறையில் அதிகரித்துள்ளது. சில நாடுகளில் அரசாங்கம் அளிக்கின்ற மானிய உதவிகளும் இதற்கு முக்கியக் காரணம் என்பது மறுக்க முடியாத ஒன்று. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு இத்துறையை எந்தவிதத்திலும் பாதிக்காது.

இத்துறையை மேலும் வளர்க்க உள்ளார்ந்த வளர்ச்சி, செலவினங்களை உயர்த்துதல், சேமிப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை அடுத்த பத்தாண்டுக்குள் மேற்கொள்ள வேண்டும். சுய மின் உற்பத்தித் திறனால் சில பழைய முறையிலான மின் உற்பத்தி முறை அழிந்துவிடும்.’ இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon