மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

குதிரைவாலியின் நன்மைகள் - ஹெல்த் ஹேமா

குதிரைவாலியின் நன்மைகள்  - ஹெல்த் ஹேமா

உணவே மருந்து என்பதை மெய்ப்பிக்கும் வகையில் உணவு முறைகளில் முக்கியம் வாய்ந்ததாகத் திகழ்வது சிறுதானியங்கள். சிறுதானியங்களில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்கள் அடங்கியுள்ளன. இதனால் சிறுதானிய உணவு வகைகள் உண்பதால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். குறிப்பாக கம்பு, ராகி தானியங்களில் கால்சியம் சத்து அதிகளவிலும், சோளத்தில் புரோட்டின் அதிகளவிலும், சாமை, குதிரைவாலி ஆகிய தானியங்களில் இரும்பு சத்து அதிகளவு உள்ளது. கம்பு, கேழ்வரகு, திணை அவற்றின் வரிசையில் ஒன்று குதிரைவாலி

சாதாரண அரிசியைப் போலவே தோற்றம் தரும் இந்த குதிரைவாலி அரிசியும் நல்ல சுவைமிக்கதே. இதைச் சமைத்து சாப்பிடுவதால் நமக்கு அதிகம் ஆரோக்கியமே.

குதிரைவாலியின் நன்மைகள்:

ரத்த சோகை வராமல் நம்மை பாதுகாக்கத் தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் இரும்பு சத்துகள் அனைத்தும் குதிரைவாலியில் காணப்படுகிறது.

குதிரைவாலியைச் சமைத்துச் சாப்பிட, இதில் அடங்கியிருக்கும் நார்சத்துகள் அனைத்தும் நேரடியாகக் கிடைத்து உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது மற்றும் மலச்சிக்கலால் ஏற்படும் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.

இந்த அரிசியைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, உடலைக் கட்டுக்கோப்பாகவும் சீராகவும் செயல்பட செய்து ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது.

ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவை குறைப்பதிலும் மற்றும் சர்க்கரையின் அளவை சம நிலையில் வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

தசைகள், எலும்புகளுக்கு வலிமை கொடுத்து செயல்படுவதோடு ஆண்டிஆக்ஸிடென்ட்டாகச் செயல்படுகிறது.

ரத்த நாளங்களில் ஏற்படும் கோளாறுகள், அடைப்புகள் வராமல் பராமரிக்கும் குதிரைவாலியைச் சமைத்துச் சாப்பிட்டுப் பயன்பெறுங்கள்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon