மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

நிர்மலாவின் மெகா ஹெலிகாப்டர் கொள்முதல்!

நிர்மலாவின் மெகா ஹெலிகாப்டர் கொள்முதல்!

இந்தியக் கடற்படைக்கு ரூ.21,738 கோடி மதிப்பில் 111 ஹெலிகாப்டர்களை வாங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியக் கடற்படைக்கு ஹெலிகாப்டர் வாங்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (அக்.31) ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி, ரூ.21,738 கோடி மதிப்பில் 111 ஹெலிகாப்டர்கள் வாங்கப்படவுள்ளது.

இவற்றில், 16 ஹெலிகாப்டர்கள் அயல் நாட்டிலிருந்து வாங்கப்படவுள்ளன. மீதமுள்ள 95 ஹெலிகாப்டர்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக வெளிநாட்டு ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனம் மற்றும் உள்நாட்டில் உள்ள ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் மாநாடு ஒன்றில் பேசிய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ராணுவத்தை நவீனப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், ராணுவத்தின் போர்த்திறனை மேம்படுத்துவதற்கு இடையூறாக உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், இந்திய ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களைத் தயாரிக்கும் பணியில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தப் போவதாகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon