மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு!

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு!

மழையால் செல்போன் சேவை தடைப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குத் தமிழக அரசு நேற்று (அக்டோபர் 31) அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாகச் சென்னை மாநகரமே இருளில் மூழ்கியது. தொலைத்தொடர்பு சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளமுடியாததால் மக்கள் சிரமப்பட்டனர். கடந்த ஆண்டு ஏற்பட்ட வர்தா புயலாலும் தொலைத்தொடர்பு சேவைக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுபோன்று இந்தாண்டும் ஏற்படக் கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஆலோசனை நடத்தினார். அதில் செல்போன் சேவைகள் பாதிக்காவண்ணம் வேண்டிய நடவடிக்கைளை எடுக்கத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது சேவை தடைப்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், சென்னையில் 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நிலைமையைக் கண்காணித்து வருவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon