மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

ஆசிய ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

ஆசிய ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி, மலேசியாவை வீழ்த்தி வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பெண்கள் ஆசியக்கோப்பை ஹாக்கி தொடர் ஜப்பானில் உள்ள காகமிகஹாராவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (அக்டோபர் 31) நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியில் நான்காம் காலிறுதியில் இந்திய அணிக்கு முதல் கோல் கிடைத்தது. 54ஆவது நிமிடத்தில் வந்தானா அந்தக் கோலை அடித்து, இந்திய அணிக்கு 1-0 என முன்னிலை பெற்றுத் தந்தார். அதன் பின்னர் அடுத்த நிமிடமே (55ஆவது நிமிடம்) குர்ஜித் கௌர் மீண்டும் ஒரு கோல் அடிக்க, இந்தியா 2-0 என வலுவான முன்னிலை பெற்றது. இறுதி வரை போராடிய மலேசிய அணிக்கு கோல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி, இந்தத் தொடரில் மூன்று வெற்றியுடன் 9 புள்ளிகளைப் பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon