மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

செம்மொழித் தமிழாய்வு: பணி நிரந்தரம் செய்ய உத்தரவு!

செம்மொழித் தமிழாய்வு: பணி நிரந்தரம் செய்ய உத்தரவு!

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் 13 ஊழியர்களின் பணியை நிரந்தரமாக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்குத் தொகுப்பூதிய அடிப்படையில் பல்வேறு பணிகளுக்கு 65 பேர் கடந்த 2007ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டனர். இதன்பிறகு 2012ஆம் ஆண்டு புதிய பணியாளர்களை நியமனம் செய்யக் கோரி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். 2007ஆம் ஆண்டு முதல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் பணியாற்றிவரும் தங்களை நிரந்தரமாக்க உத்தரவிட வேண்டும்’ என ஆரோக்கியதாஸ் என்பவர் உள்பட 13 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு விவாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, ‘முறையாக அறிவிப்பு வெளியிட்டு, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட கடுமையான தேர்வு நடவடிக்கைகளுக்குப் பிறகே மனுதாரர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இவர்களின் நியமனம் சட்ட விரோதமோ, சட்ட மீறலோ இல்லை என்று மேற்கோள் காட்டி, மனுதாரர்களின் நியமனத்துக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட தேர்வு விதிகளைக் காரணம் காட்டி, அவர்களின் உரிமையைப் பறிக்க முடியாது. 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய தேர்வு விதிகள், எதிர்கால தேர்வு நடைமுறைகளுக்குப் பின்பற்றலாம். இவர்களை நான்கு மாதங்களுக்குள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், புதிய பணியாளர்களைத் தேர்வு செய்ய 2012ஆம் ஆண்டு செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon