மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

காளான் கட்லட் - கிச்சன் கீர்த்தனா

காளான் கட்லட் - கிச்சன் கீர்த்தனா

அல்டிமேட்!

தண்ணிபோக வேண்டிய ஆத்துல மணல் லாரிய ஓடவிட்டான் மனுசன்.

லாரிபோக வேண்டிய ரோட்ல மழை தண்ணிய ஓட விடுது இயற்கை..

என்ன விதைக்கிறோமோ அதற்கான பலன் கிடைத்தே தீரும்.

‘நீ பற்ற வைத்த நெருப்பொன்று தற்போது எரிந்துகொண்டிருக்கிறது’ என்று பஞ்ச் டயலாக் சொல்லிவிட்டு (பாதிக்கப்பட போவதும் நாம்தான்)... பற்ற வைத்த நெருப்பில் (சமையல் கேஸ்) கட்லட் செய்து சாப்பிடலாம் வாருங்கள்.

காளான் கட்லட்

தேவையானவை:

மொட்டுக்காளான் - 12 எண்கள் (சிறிய துண்டுகளாக வெட்டவும்), உருளைக்கிழங்கு - 3 சிறியது (வேகவைத்து மசிக்கவும்), வெங்காயம் - 2 (துண்டுகளாக நறுக்கவும்), பச்சைப் பட்டாணி - கால் கப் (வேகவைக்கவும்), பச்சை மிளகாய் - 3 (துண்டுகளாக நறுக்கவும்), இஞ்சி - 1 துண்டு (துண்டுகளாக நறுக்கவும்), பூண்டு - 1 பல்லு (துண்டுகளாக நறுக்கவும்), கறிவேப்பிலை - 1 சிறிதளவு (நறுக்கியது), கொத்தமல்லி இலை - சிறிதளவு (நறுக்கியது), மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, கரம்மசாலா- அரை தேக்கரண்டி, அப்பத் துண்டுகள் - ஒன்றரை கப், முட்டை – 2, சமையல் எண்ணெய்- 2 மேசைக்கரண்டி (மசாலாவுக்கு) மற்றும் 150 மி.லி (மேலோட்டமாக வறுப்பதற்கு), உப்பு தேவையான அளவு.

மசாலாவைத் தயாரிக்கும் முறை:

வட சட்டியில் எண்ணெயைவிட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வரும்வரை வதக்கவும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியைச் சேர்த்து வதக்கவும். உப்பு தேவையான அளவு போட்டு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் மற்றும் கரம் மசாலாதூளைச் சேர்த்து 20 – 30 நொடிகள் வரை நன்றாக கலக்கவும்.

நறுக்கிய காளான்கள், பச்சை பட்டாணி, கறிவேப்பிலையைச் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தை எடுத்து மசித்த உருளைக்கிழங்கைப் போடவும்.

செய்து வைத்த மசாலாவை இந்தப் பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும். பின் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.

கட்லட் செய்யும் முறை:

முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடிக்கவும். அப்பத் துண்டுகளை தட்டையான தட்டில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

மசாலாவை சிறிய பந்துகள் போல் புடித்து, தட்டி, அதை முட்டையில் முக்கி எடுத்து பின் அப்பத்துண்டுகளில் மெல்லிய துண்டுகளாக வரும் வரை போட வேண்டும்.

அது கெட்டியான பின் பெரிய கட்டியாகத் தயார் செய்ய வேண்டும்

கீர்த்தனா சிந்தனை:

அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம்னு செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து விட்றாதீங்கடா... #அப்பரசண்டிகளா

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon