மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

டோலிவுட்டில் கலக்கும் அனு

டோலிவுட்டில் கலக்கும் அனு

விஷால் நடித்த துப்பறிவாளன் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான அனு இம்மானுவேல் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தெலுங்கில் ஏற்கனவே இரு படங்களில் நடித்துள்ள அவர், ஆக்ஸிஜன் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார். மேலும் அல்லு அர்ஜுனின் `நா பேரு சூர்யா' மற்றும் பவன் கல்யாணுடன் நடிக்கும் பெயரிடப்படாத இரு படங்களில் நடித்து வருகிறார்.

பவன் கல்யாணுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில் அவர், “பவன் கல்யாண் சாருடன் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது மிகவும் பயந்து போயிருந்தேன். அது ஒரு காதல் காட்சி. நன்றாக தயாராக இருந்தும் அவரைப் பார்த்த உடன் எனது வசனங்களை எல்லாம் மறந்துவிட்டேன். அவர் மிகவும் கூலான மனிதர். அவரோடு சேர்ந்து நடித்தது என் பாக்கியம்” என்று கூறியுள்ளார்.

அனு இப்படங்களுக்குப் பிறகு நாக சைதன்யா நடிக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடிக்கவுள்ளார். “தெலுங்கு படங்களில் நடித்த பின் மலையாள படங்களிலும் ஒப்பந்தமாகத் திட்டமிட்டுள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நா பேரு சூர்யா மற்றும் பவன் கல்யாண் நடிக்கும் இந்தப் படங்கள் வெற்றி பெரும் பட்சத்தில் அனு இம்மானுவேல் தெலுங்கு சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகையாக வலம் வருவார்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon