மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 8 ஜூலை 2020

சிவகங்கையில் புகைப்படக் காட்சி!

சிவகங்கையில் புகைப்படக் காட்சி!

சிவகங்கை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக் காட்சி நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் மலம்பட்டிக் கிராமத்தில் செய்திக மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக் காட்சி நேற்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சிறப்பு செயலாக்கத் திட்டத்தின் கீழ், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம்பெற்றன. மேலும், இக்காட்சியில் அரசுத் திட்டங்கள் குறித்தும், அரசு நலத் திட்டங்களை எவ்வாறு பெறுவது குறித்தும், யாரை அணுகிப் பெற வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது, பொதுமக்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம், நலத்திட்ட உதவிகள் குறித்த பல்வேறு கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெற்றார்கள்.

புகைப்படக் காட்சியைப் பார்த்த பொதுமக்கள், தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ளவும் நலத் திட்ட உதவிகளை யாரை அணுகிப் பெற வேண்டும் என்பது குறித்து அறிந்துகொள்வதற்கும் இந்தக் காட்சி உதவியாக இருந்ததாகத் தெரிவித்தனர்.

புதன், 1 நவ 2017

chevronLeft iconமுந்தையது