மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 16 ஜன 2021

புள்ளி விபரக் கண்ணாடி!

 புள்ளி விபரக் கண்ணாடி!

விளம்பரம்

கூவம் நதி மேம்பாட்டுக்கும் சீரமைப்புக்கும் சென்னை மேயராக இருந்த மனித நேயர் ஆற்றிய அரும்பணிகளைப் பார்த்து வருகிறோம்.

சென்னை நதிகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை ஒருங்கிணைந்த கூவம் நதி மறு சீரமைப்பு பணி மேற்கொள்ள கடந்த அக்டோர் 2012-ல் எல்.கே.எஸ். என்ற நிறுவனத்தை ஆலோசகராக நியமித்தது. எல்.கே.எஸ். நிறுவனம் கூவம் நதி மறு சீரமைப்பு பணிக்காக 2014-ஆம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி தொடக்கத்தில் ரூ.3833.62 கோடியில் புனரமைப்பு பணி மேற்கொள்ள அறிக்கை சமர்ப்பித்தது. அதன் பின்னர் தொடர் ஆலோசனைகள் ஒவ்வொரு துறையாக நடத்தி, பின்னர் நவம்பர் 2014-ல் இறுதி விரிவான திட்ட அறிக்கையில் ரூ.1934.84 கோடியில் புனரமைப்பு பணி மேற்கொள்ள அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி மூன்று கட்டங்களாக குறுகிய கால பணிகள்(0-3 வருடங்கள்), இடைக்கால பணிகள் (4-12 வருடங்கள்), நீண்ட கால பணிகள் (13-25 வருடங்கள்) என பணிகள் பிரிக்கப்பட்டன.

கூவம் நதியை மேம்படுத்த மனித நேயர் செயல்படுத்திய திட்டங்களையும், செயல்முறைகளையும் புள்ளிவிபரக் கண்ணாடி அணிந்து கொண்டு இப்போது பார்ப்போமா?

கூவம் நதி மறு சீரமைப்பு பணி மேற்கொள்ள பருத்திப்பட்டு முதல் நேப்பியர் பாலம் முகத்துவாரம் வரை 20 கி.மீக்கு 7 துறைகளுக்கு பணிகள் பிரித்து அளிக்கப்பட்டது.

குறுகிய கால பணிகள் : 60 ஒப்பப் பணிகள் ரூ.1453.76 கோடி
இடைக்கால பணிகள் : 7 ஒப்பப் பணிகள் ரூ. 247.19 கோடி
நீண்ட கால பணிகள் : 2 ஒப்பப் பணிகள் ரூ. 2.45 கோடி

மொத்தப் பணித்தொகை: 69 பணிகளுக்கு ரூ.1703.40 கோடிக்கு மற்றும் இதர செலவு, மேற்பார்வை செலவு, விலை உயர்வு ஆகியவைக்கு ரூ.231.44 கோடியும் சேர்த்து மொத்த தொகை ரூ.1934.84 கோடிக்கு மேற்கொள்ள தமிழ் நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ஆணை பிறப்பித்தது.

அதன்படி குறுகிய கால பணிகள் மேற்கொள்ள (0-3 வருடங்கள்) மொத்தம் 60 ஒப்பப் பணிகள், ரூ.1646.52 கோடியில் மேற்கொள்ள 7 துறைகளும் நடவடிக்கை மேற்கொண்டன.

பொதுப்பணித் துறை 9 பணிகள் பணித் தொகை ரூ.81.01 கோடி மொத்தத் தொகை ரூ.93.57 கோடிக்கு ஒப்பங்கள் பெறவும், பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் தற்போது பருத்திப்பட்டு முதல் சேத்துப்பட்டு மன்றோ பாலம் வரை ஆக்கிரமிப்பு இல்லாத பகுதிகளில் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சேத்துப்பட்டு மன்றோ பாலம் முதல் நேப்பியர் பாலம் முகத்துவாரம் வரை, கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பணிகளை மூன்று வருடங்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி, 12 ஒப்பப் பணிகள் மேற்கொள்ள மொத்தத் தொகை ரூ.100.96 கோடியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் திடக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கூவம் நதிக்கரையின் இரு பக்க எல்லைகளிலும் ஆக்கிரமிப்பு இல்லாத பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி எல்லையிலிருந்து சேத்துப்பட்டு மன்றோ பாலம் வரை சுற்றுச் சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சுற்றுச் சுவர் அமைக்கும் பணி, பூங்கா அமைக்கும் பணி, நடைபாதை அமைக்கும் பணி, மிதி வண்டி தடம் அமைக்கும் பணி சேத்துப்பட்டு மன்றோ பாலம் முதல் நேப்பியர் பாலம் முகத்துவாரம் வரை, கடலோர ஒழுங்குமுறை மண்டலம் ஒப்புதல் அளித்தவுடனும் மற்றும் பொதுப் பணித் துறை சில்ட் எடுத்து பண்ட் அமைக்கும் பணி முடித்தவுடன் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூவம் நதியில் பின்னி பாலம் அருகே மாதிரி Boom system அமைக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி கூவம் நதி ஓரம் உள்ள மிகுதியான இடங்களில், 24 இடங்களில் பூங்கா பணி, நடைபாதை பணி, மிதி வண்டி தடம் மற்றும் பூங்காவில் செடிகள், மலர் செடிகள் அமைக்கும் பணி மற்றும் கல்லூரி சாலை பாலம் (ஆன்டர்சன் பாலம்) முதல் சேத்துப்பட்டு பாலம் வரை (மன்றோ பாலம்) இயற்கை வழித் தட பூங்கா அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் 9 பூங்காக்கள் குறுகிய கால பணிகளில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நகராட்சி நிர்வாகத் துறை - 5 ஒப்பப் பணிகள் மொத்த தொகை ரூ.31.47 கோடியில் திருவேற்காடு பகுதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் திடக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கூவம் நதிக்கரையின் இரு எல்லைகளிலும் ஆக்கிரமிப்பு இல்லாத பகுதிகளில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சிறுவர் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித் துறை - 7 ஒப்பப் பணிகள் - மொத்தத் தொகை ரூ.3.67 கோடியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதில் திடக்கழிவு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கூவம் நதியின் இரு எல்லைகளிலும் ஆக்கிரமிப்பு இல்லாத பகுதிகளில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கூவம் சீரமைப்பு என்பது எத்தனை கிளைப் பணிகளை உள்ளடக்கியது என்பதை மேற்கண்ட விவரங்களைப் பார்த்தால் தெரியும்.

இவற்றில் மாநகராட்சிப் பணிகளை முடுக்கிவிட்டு மற்ற பணிகளையும் முடுக்கிவிட்டு தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார் மனித நேயர்.

இன்னும் புள்ளி விவரங்கள் இருக்கின்றன… காணீர்!

விளம்பர பகுதி

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon