மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: நூறு சதவிகித உண்மை!

 கோவை ‘ஶ்ரீ தக்‌ஷா’: நூறு சதவிகித உண்மை!

விளம்பரம்

“வீட்டை வாங்கப்போறது நீங்கன்னாலும், அந்த வீட்டுல நாள் முழுக்க வசிக்கப்போறது நாங்கதானே... எங்கப்பா குடும்பத்துக்கு மட்டுமல்ல... நம்ப குடும்பத்துக்கும் சேர்த்தும்தான் வீடு பார்க்கப் போறோம். அதுக்குதான் நானும் வர்றேன்” என்று என் மருமகள் பேசிவிட்டு சென்றபோது... ஒரிசாவில் பிறந்து வளர்ந்தவள் தன் அப்பாவோடு கோவையைச் சுற்றிப்பார்க்கத்தான் வருகிறாள் என்று நினைத்தேன்.

ஆனால், அவர் தந்தை கத்திரியால் நறுக்கியது போல் என்னிடம் பேசிய வார்த்தைகளுக்குப் பின்பு என் மருமகளின் திட்டமிடல் தெளிவாகவே புரிந்தது.

பெண்களுக்குப் பால் கணக்கை எழுதி வைப்பதைத்தாண்டி வேறு பெரிய அளவிலான கணக்கு வழக்குகளெல்லாம் புரியாது என நீங்கள் இன்னமும் நினைத்துக்கொண்டிருந்தால், அது தவறு.

ஞாயிறோடு ஞாயிறு எட்டு, திங்கள் ஒன்பது, செவ்வாய் பத்து என்று வாய்க்கணக்கு போட்டதெல்லாம் அந்த காலம். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருந்தாலும், இருப்பதில் எதைச் சிக்கனமாகச் செலவு செய்தால் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளலாம் என்றும்

எதிர்கால நிதித் திட்டமிடல் பற்றி பல ஆண்களே கவலைப்படாத நிலையில், ‘என் குடும்பத்துக்கான எதிர்காலம் இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்று நினைக்கும் என் மருமகளைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

“உங்கப்பா தன்னோட ஓய்வு காலத்தைக் குடும்பத்தோடு நிம்மதியா கழிக்கணும் என்பதற்காக கோவையைத் தேர்ந்தெடுத்து பிளாட் வாங்கப்போறது நல்ல விஷயம்தான். வரவேற்கிறேன். குறிப்பா ‘ஶ்ரீ தக்‌ஷா’லதான் வாங்கணும்னு உங்கப்பா சொன்னாரே எப்படி?”

“அங்கிள் ‘ ஶ்ரீ தக்‌ஷா’ வெப் சைட்டைப் பார்த்தேன். நீங்களும் http://sreedaksha.com/sree-daksha-properties-about-us/ என்கிற முகவரியிலே போய் பாருங்க புரியும். அதுலே ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. Hreeva, Vhridhaa, Aashritha, Sanshray, Sphurana, Darza, Yagnya, Thvisha என்கிற பெயர்களில் விதவிதமான பிளாட்களைக் கட்டிக்கொடுத்திருக்காங்க... இன்னும் பல பெயர்களில் கட்டிக்கொண்டும் இருக்காங்க. பார்க்கும்போதே வாங்கணும்னு தோணும்.

ஒவ்வொன்றும் வெவ்வேறு வகை. அதைப் பார்க்கும்போது அது ஓர் அபார்ட்மென்ட் போல தெரியலை.... நாம கற்பனையிலே எதை நினைச்சுட்டு இருக்கிறோமோ அப்படிப்பட்ட ஒரு புதிய நகரம் கண்முன் தெரியற மாதிரி இருக்கு. நமக்கு எது பிடிக்குமோ அதைத் தேர்ந்தெடுத்துக்கலாம்.”

“சரி... அதுக்குதானே நேரே போறோம்...”

“அப்புறம் முக்கியமான விஷயம் அங்கிள்... ஒரு பிளாட்டையோ, மனையோ வாங்கறதுக்கு முன்னே எதிலெல்லாம் கவனமா இருக்கணுமோ ... அதையெல்லாம்கூட கேட்டு வெச்சுட்டேன். அந்த விஷயத்துலே ‘ஶ்ரீ தக்‌ஷா பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ்’ பக்காவா இருக்காங்க.”

“எப்படி தெரிஞ்சுக்கிட்டே?”

“அவங்களோட சைட்ல விசாரணைக்கான தொடர்பு எண் 0422-2427754 என்று கொடுத்திருக்காங்க. அதுக்கு போன் போட்டேன். விவரமா பதில் சொன்னாங்க. அவங்கச் சொன்ன பதிலில் நூறு சதவிகிதம் உண்மை இருப்பது தெரிஞ்சது. அதுவுமில்லாமல் சில பில்டர்ஸ் சம்பாதிக்கதான் வழி பார்ப்பாங்களே தவிர மக்களைப் பத்திக் கவலைப்பட மாட்டாங்க. ஆனா, இவங்க பொது சேவையிலும் தங்களை ஈடுபடுத்திக்கிட்டு வர்றாங்க.

மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கறது, சில பள்ளிகளைத் தத்தெடுத்து அதைப் பராமரிக்கிறது என்று பல சமூகச் சேவைகளையும் செய்துட்டு வர்றாங்க. இப்படி சமூகத்தைப் பத்தியும் கவலைப்படறவங்க... தங்களிடம் பிளாட் வாங்கறவங்களை சாதாரணமாகவா விட்டுடுவாங்க.”

“அப்புறம்?”

“ஶ்ரீ தக்‌ஷா நடத்தற ஒவ்வொரு நிகழ்விலும் பொது மக்கள் ஆர்வமா கலந்துக்கறதைப் பார்க்கும்போது அவங்க மேலே எனக்கேற்பட்ட மதிப்பு இன்னும் அதிகமாகிடுச்சு. இந்தப் போட்டோவைப் பாருங்களேன்” என்று தன் மொபைலில் பதிவு செய்து வைத்திருந்த போட்டோவைக் காட்டினாள். பிரமித்துப் போனேன்.

ஶ்ரீ தக்‌ஷாவில்தான் தன் குடும்பத்துக்கான குடியிருப்பை வாங்க வேண்டும் என்று மருமகளிடம் ஏற்பட்டுள்ள உறுதி என்னை வியக்க வைத்தது. பேசாமல் இருந்தேன்.

“என்ன அங்கிள் யோசிக்கிறீங்க... எங்கப்பா தன்னோட ஓய்வு காலத்தை நிம்மதியா கழிக்கணும்னு கோவையிலே பிளாட் வாங்கறார். ஆனால் என் தம்பியோட நிலைமை என்னவென்றா யோசிக்கிறீங்க...?”

நான் சற்றும் யோசிக்காத விஷயம் இது... ஆனால், அவள் அத்தனையையும் யோசித்துவிட்டுதான் காய் நகர்த்தியிருக்கிறாள்.

“தென்னிந்தியாவில் ஆட்டோமொபைல் நகரம் என்றால் என் நினைவுக்கு வருவது கோயம்புத்தூர்தான் அங்கிள். என் தம்பி படிச்சது ஆட்டோமொபைல் இன்ஜீனியரிங் கோர்ஸ். கார் ரேஸ் போட்டிகளின் தலைநகரம் என்றால் அது கோவைதானே அங்கிள். கரிவரதன் தொடங்கி பல தொழிலதிபர்கள் ரேஸ் போட்டியில் ஆர்வம்கொண்டவர்களாக இருந்திருக்காங்க. அந்த வரிசையில் கோவையின் அடையாளங்களில் ஒருவராக இன்று நரேன் கார்த்திகேயன் இருக்கார். அப்படிப்பட்ட ஆட்டோமொபைல் நகரத்துல என் தம்பிக்கும் நிச்சயம் நல்ல இடமிருக்கும் அங்கிள்” என்றாள் நம்பிக்கையாக.

ஆனால், ‘நம்ப குடும்பத்துக்கும் சேர்த்தும்தான் வீடு பார்க்கப் போறோம்’ என்று ஆரம்பத்தில் அழுத்தமாக என் மருமகள் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம்தான் இன்னும் புரியவில்லை எனக்கு.

பயணம் தொடரும்...

விளம்பர பகுதி

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon