மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

மழையால் ஏற்பட்ட விபத்துக்கள்: 6 பேர் பலி!

மழையால் ஏற்பட்ட விபத்துக்கள்: 6 பேர் பலி!

தமிழகத்தில் பெய்துவருகிற தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே விபத்துகளும் நடந்துவருகின்றன. கடலூர் மாவட்டம் பில்லாளி தொட்டி பகுதியைச் சேர்ந்த லதா என்பவர் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்துள்ளார். ஸ்ரீமுஷ்ணம் அருகே உரம்பு என்ற இடத்தில் மின் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ராமசாமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் நித்யா என்ற 9ஆம் வகுப்பு மாணவி பலியானார்.

நேற்று (அக்டோபர் 30) சென்னை அனகாபுத்தூர் கஸ்தூரிபாய் நகர் முதல் தெருவைச் சேர்ந்த லோகேஷ் (வயது 19), அவரது நண்பர் கிஷோர் (17) ஆகிய இருவரும் மாடியில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

மேலும் நேற்று பெய்த கன மழையில் ஓட்டேரி பக்கிங்காம் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதில் தடுமாறி கீழே விழுந்து சாந்தா என்பவர் உயிரிழந்துள்ளார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon