மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

ஆட்டோவில் இலவச வைஃபை!

ஆட்டோவில் இலவச வைஃபை!வெற்றிநடை போடும் தமிழகம்

ஓலா ஆட்டோக்களில் பயணம் செய்வோர் இலவசமாக இணைய இணைப்பைப் பெறும் வகையில் வைஃபை வசதியை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய டாக்ஸி போக்குவரத்து சேவை நிறுவனமான ஓலா, இந்திய டாக்ஸி சந்தையில் அமெரிக்காவின் உபேர் நிறுவனத்தின் போட்டியைச் சமாளிக்கவும், அதிகப் பயணிகளைக் கவரவும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. கட்டணக் குறைப்பு ஓட்டுநர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கி பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, பகிர்ந்து பயணிக்கும் ’ஓலா ஷேர்’ உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அடக்கம். இந்நிலையில் ஓலா நிறுவனம் தனது ஆட்டோக்களில் வைஃபை வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் 73 நகரங்களில் ஓலா நிறுவனம் சுமார் 1,20,000 ஆட்டோக்களை இயக்கி வருகிறது. இதில் நாள் ஒன்றுக்கு ஓலா மொபைல் ஆப் வாயிலாக 4 லட்சம் வரையிலான ஆட்டோ பயணங்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இணையதள வசதியுடன் தங்களது பயணிகளுக்குச் சிறந்த பயணத்தை வழங்குவதாகவும், இந்திய அரசின் ’டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தில் இதன் மூலம் தங்களது பங்களிப்பை வழங்குவதாகவும் ஓலா நிறுவன ஆட்டோ பிரிவின் தலைவர் சித்தார்த் அகர்வால் கூறுகிறார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon