மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

பிட் அடித்த ஐபிஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு!

பிட் அடித்த ஐபிஎஸ்  அதிகாரி சிறையில் அடைப்பு!வெற்றிநடை போடும் தமிழகம்

ப்ளூ டூத் மூலம் பிட் அடித்த ஐபிஎஸ் அதிகாரியை நேற்று (அக்டோபர் 31) இரவு எழும்பூர் 14ஆவது நீதிமன்றத்தில் .ஆஜர்படுத்தி, காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். அவரது மனைவியையும் கைது செய்துள்ளனர்.

சென்னை எழும்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளூ டூத் மூலம் பிட் அடித்த ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் என்பவரை நேற்று மத்திய உளவுத் துறை வழிகாட்டுதலின்படி காவல் துறை ஆய்வாளர் சேட்டு தலைமையில் அதிகாரிகள் கைதுசெய்தனர்.

கரீம் தன்னுடைய மார்பில் ஒரு மைக்ரோ கேமராவைப் பொருத்தி அதனை. கூகுள் ட்ரைவில் இணைத்துள்ளார். பின் கேமரா மூலம் வினாத்தாளை ஸ்கேன் செய்து அதனை கூகுள் ட்ரைவிலிருந்து ஹைதராபாத்தில் இருந்த அவரது மனைவியின் ஐபாடுக்கு அனுப்பியுள்ளார்.

ப்ளூ டூத் மூலம் அவரது மனைவி கேள்விகளுக்கு விடை கொடுத்துள்ளார். இதை அறிந்த தேர்வறை அதிகாரிகள் அவரைக் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இவரை நேற்று (அக்டோபர் 30) குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தற்போது நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

காப்பியடிக்க உதவிய அவரது மனைவி ஜாய்ஸ் ஜோவைக் கைதுசெய்ய நேற்று சென்னை போலீசார் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர். ஹைதராபத்தில் தங்கியிருந்த அவரது மனைவி, அவருக்கு உதவிய ராம்பாபு ஆகிய இருவரையும் இன்று காலை போலீசார் கைதுசெய்தனர். அவர்களை அங்கிருந்து சென்னை கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

ஹைதராபாத், அசோக் நகரில் உள்ள லா எக்ஸலன்ஸ் ஐஏஎஸ் - சிவில் சர்வீஸ் இன்ஸ்டிட்யூட்டில் வருகைதரு பேராசிரியராக ஜோ பணிபுரிந்துவந்துள்ளார். இந்த இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநர் ராம்பாபு, கரீம் தேர்வுக்கு உதவ, கரீமின் மனைவிக்கு இரண்டு கம்ப்யூட்டர்கள், மடிக்கணினிகள், ஒரு ஐபாட் மற்றும் பிற கருவிகளை வழங்கியுள்ளார். அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் ராம்பாபுவையும் கைது செய்துள்ளனர்.

“கேரளாவின் ஆலுவா மாவட்டத்தைச் சேர்ந்த கரீம் 2015ஆம் ஆண்டில் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்றார். பின் தமிழ்நாடு பிரிவில் பணியில் நியமிக்கப்பட்டார். ஐ.பி.எஸ். பணி அவரைத் திருப்திப்படுத்தவில்லை என்பதால் ஐ.ஏ.எஸ் ஆவதற்கு ஆர்வமாக இருந்த அவர் முறைகேடாகத் தேர்வெழுத முயற்சித்துள்ளார். இவருக்கு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் பயிற்சி மையங்கள் உள்ளன. அங்கு கரீம் ஐ.ஏ.எஸ்., சிவில் சர்வீஸ் தேர்வர்களுக்குப் பயிற்சி அளித்துவந்துள்ளார். தனது பயிற்சி மைத்தில் பொருளாதார ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஜாய்ஸ் ஜோவை 2016இல் திருமணம் செய்துகொண்டார்” என்று காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon