மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 31 அக் 2017

வைரலாகும் ஸ்ரேயா புகைப்படம்!

வைரலாகும் ஸ்ரேயா புகைப்படம்!

நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

சமீபத்தில் இந்தோனேசியா சென்ற ஸ்ரேயா, அங்குள்ள பன்டா கடல் பகுதியில் கடலுக்குள் நீச்சல் உடையில் கடல் கன்னி போல் நீந்தியதைப் புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று (அக்டோபர் 30) வெளியிட்டார்.

கடலுக்கு அடியில் புகைப்படம் எடுக்கும் கலைஞர் அனுப்ஜகட் இந்தப் படங்களை எடுத்துக்கொடுத்துள்ளார். ஸ்ரேயா நீந்துவதைக் காட்டும் இந்தப் புகைப்படத்தை 50 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

இப்புகைப்படம் குறித்து ஸ்ரேயா, “இதனை நான்தான் செய்தேன் என்று என்னாலேயே நம்ப முடியவில்லை. கடலுக்கு அடியில் என்னை புகைப்படம் எடுத்த அனுப்ஜகட்க்கு நன்றி. கடலை விரும்புபவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்த போட்டோ ஷூட்டில் ஸ்ரேயா பங்கேற்றபோது மிகவும் கடினமான சூழலையும் மிக எளிதாகக் கையாண்டதாகப் பாராட்டியுள்ளார் புகைப்படக் கலைஞர் அனுப்ஜகட்.

பட வாய்ப்புக்காக இப்படிக் கவர்ச்சியான புகைப்படத்தை ஸ்ரேயா வெளியிட்டிருப்பதாகச் சிலர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon