மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

ஆதார் ஆபத்தானது: சுப்ரமணியன் சாமி

ஆதார் ஆபத்தானது: சுப்ரமணியன் சாமிவெற்றிநடை போடும் தமிழகம்

ஆதாரைக் கட்டாயமாக்குவது என்பது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும் என பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

“ஆதாரைக் கட்டாயமாக்குவதன் மூலம் தேச பாதுகாப்புக்கு எப்படி ஆபத்து ஏற்படும் என்பது தொடர்பாக பிரதமர் மோடிக்கு விரைவில் கடிதம் எழுதவுள்ளேன்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்ரமணியன் சுவாமி, ஆதார் கட்டாயமாக்கப்படுவதை உச்ச நீதிமன்றமும் தடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றைப் பெறுவதற்கு ஆதார் எண்ணைப் பொதுமக்கள் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் சலுகைகள் அல்லாமல், பான் கார்டு, வங்கிக் கணக்கு, மொபைல் போன்றவற்றுடனும் ஆதாரை இணைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது.

ஆதார் எண்ணை இணைப்பதற்கு டிசம்பர் 31 இறுதித் தேதி என மத்திய அரசு கெடு விதித்திருந்தது. தற்பொழுது அந்தக் கெடுவானது அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .

மத்திய அரசு தொடர்ந்து ஆதாரைக் கட்டாயமாக்குவதை எதிர்த்துப் பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் உச்ச நீதிமன்றம் நேற்று (அக்.30) நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் அனைத்து வலியுறுத்திவரும் வேளையில், பாஜவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான சுப்ரமணியன் சுவாமியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon