மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

ஊட்டி சர்வதேசக் குறும்பட விழா!

ஊட்டி சர்வதேசக் குறும்பட விழா!வெற்றிநடை போடும் தமிழகம்

தெற்காசிய அளவில் நடைபெறவிருக்கும் குறும்படத் திருவிழா ஊட்டி, தாவரவியல் பூங்கா அருகிலுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தின் பிரம்மாண்டமான காட்சி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. ஊட்டி திரைப்பட விழா அமைப்பு (OFF- Otty film festival) ஒருங்கிணைக்கும் இவ்விழா நவம்பர் 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் தமிழ்த் திரையுலகப் பிரமுகர்களுடன் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய திரைப்படத் துறைகளின் முக்கியப் படைப்பாளிகளும் கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்தக் குறும்பட விழாவின் பெஸ்டிவல் டைரக்டராக இயக்குநர் மிஷ்கின் பொறுப்பேற்றுள்ளார். அவருடன் அமெரிக்காவின் மிஷிஷிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் திரைக் கல்வியைப் பயிற்றுவிக்கும் பேராசிரியர் சொர்ணவேல் ஈஸ்வரன், எழுத்தாளர் பவா செல்லத்துரை, பதிப்பாளர் வேடியப்பன் ஆகியோரும் இணைந்துள்ளனர். தேர்வுக் குழுவில் உலக சினிமா பரிச்சயம் கொண்ட பல முன்னணி இயக்குநர்களும் எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் திரை ஆர்வலர்களும் இடம்பெற உள்ளனர். திரையிடத் தேர்வுபெறும் குறும்படங்களுக்கு இடையிலான போட்டியில் வெல்லும் படைப்புகளுக்கு வழங்கப்பட இருக்கும் பரிசுத் தொகை உள்ளிட்ட திரைப்பட விழா செலவுகளை ஊட்டி பிலிம் சொஸைட்டி ஏற்று நடத்துகிறது.

இந்த குறும்பட விழாவுக்கு இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து குறும்படங்கள் வந்துள்ளன. தமிழகத்திலிருந்தும் இலங்கையிலிருந்தும் மட்டும் இதுவரை 250 குறும்படங்கள் குவிந்துள்ளன.

விழாவில் கலந்துகொள்ள தொடர்புக்கு

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon